பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) க்ஷணப்பித்தம் வீட்டுக்கு வந்ததும் அவளுக்குத் தூக்கமும் பிடிக்கவில்லை. அந்தப் படத்துக்கு ஏன் போனோம் என்று இருந்தது அவளுக்கு, ஜன்னல் கதவுகளையெல்லாம் திறந்து போட்டு, காற்றுவரும் திசையில் உடம்பைக் கிடத்தினாள். சுகமான காற்றுத்தான். என்றாலும், புழுங்குவது மாதிரி இருந்தது. . ஜன்னலுக்கு வெளியே இருள் குளப்பாசிபோலக் காப்பீக் சுமித்து, கனத்துக்கிடந்தது. நிர்மலா இருளையே வெறித்துப் பார்த்தாள். அந்த இருளின் அந்தகாரத்திலும் அந்தச் சுவரொட்டி - விளம்பரம் கண்முன் தோன்றியது. அந்த நிலையைக் கற்பனை பண்ணினாள். அப்போது ரங்கநாதனின் முகம் தன் முகத்தை நெருங்குவதுபோல ஒரு பிரமை, தட்டி.யது. தன்னை a.ம் அறியாமல், அவள் வாய் 'ரங்கா' ரங்கா' என்று முனகியது. தன் உள்ளத்தையும் உடலையும் வாட்டும் அந்தப் புது" அனுபவத்தை அவள் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை. , சீதாராமனிடம் பழகிய போது ஏற்பட்ட அனுபவம்போலத் . தர்வி. , . இதுவும் தோன்றிற்று. இருந்தாலும், அவன் : வயதென்ன? அவள் வயதென்ன? ரங்கநாதன் அவளுக்குப் , பிள்ளை வயது தானே இருப்பான்! ஆனால், அவள் ரங்கநாத . னிடம் கண்டது அவனது இளமையா? இல்லையே! சீதாராமன் அவல் மனசில் தீட்டிவிட்ட காவியக் காதலன்-லட்சியக் காதலன் -அந்த மூர்த்தத்தைத்தானே அவள் கண்டாள்! ... இந்த உண்மையை அவள் உணர்ந்துகொண்டாள். ' அப்படி. 2.18rனால், நிர்மலா ரங்கநா தனைக் காதலிக்கிறாளா? பதினெட்டு வயது இளைஞனிடம் அவனைவிட இரண்டு ' மடங்கு உப்பான ஒரு பெண், காதல் கொள்வதா? இது லிந்தையாயில்லையா? அதற்கு அர்த்தம்? " - - - அந்த அர்த்தம் தான் அவளுக்குப் புலப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/74&oldid=1270250" இலிருந்து மீள்விக்கப்பட்டது