பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் அவனுக்கு இப்படிக் கேள்வி மேல் கேள்வி யாய் மனசில் எழுந்தாலும், அதன் காரணம் விளங்கவில்லை, அவன் பதினெட்டு வயதை எட்டிவிட்ட இளைஞன். பால்யத்தின் சில்லுக்குரல் உடைந்து , தன் குரல் காத்துக் கரகரப்பு எய்தியிருப்பதையும் அவன் உணர்ந்தால் , அது ஒரு குழந்தையின் குரல் அல்ல; ஒரு ஆண் மகனின், குரல், அது தான் அவனுக்குத் தெரியாது. கடந்த ஒரு வருஷ காலத்தில் அவன் பீர்க்கங் கொடிபோல 13த:தே வென்று வளர்ந்துவிட்டான். சில மாத காலமாகத்தான் அவன் ,முகச் சவரம்கூடப் பண்ணிக் கொள்கிறான், தன் . உடம்பிலே ஏற்பட்டு வரும் பருவகால மாறுதலை அவனும் தான் உணர்ந்தான். இப்போது ஊருக்குச் சென்றால், தன் தாயைத் தொட்டுப் பழகக்கூடக் கூசினான். அவள் என்ன அவனுக்கு அன்னியமாய்ப் போய்விட்டாளா? இல்லையே? பின் இந்த மன மாறுதலுக்குக் காரணம்? " முன்னெல்லாம் ரங்கநாதன் ட்ராயரைப் போட்டுக் கொண்டு எங்கு வேண்டுமென்றாலும் சுற்றி வந்துவிடுவான். இப்போது அவன் தளரத் தளர வேட்டி கட்டாமல் வெளியில் செல்வதற்கே கூசினான். தினம் முகத்தை ஆறேழு தடவை . சோப்பிட்டுக் கழுவிக் கொண்டான்.. கண்ணாடி ' முன் வெகு நேரம் செலவழித்தான். இதெல்லாம் எதற் காக? வேட்டி கட்டாவிட்டால் அவனைச் சின்னப் பிள்ளை என்று விடுவார்களா? அப்படியானால், அவன் பேசிய மனுஷன் ஆகிவிட்டானா? . . அவனுக்கும் இந்தச் சஞ்சலத்தின் புதிர் விளங்கவில்லை. நான் அலங்கோலமாய்ப் போனால் போருக்கென்ன? அப்படி யானால், நான் அலங்கரிப்பது பாருக்காக?, இதை ஆராயும் போது, அவன் உள்ளத்தில் ஏதோ சூனியம் விழுந்துபோன மாதிரி ஒரு உணர்ச்சி தோன்றியது: நான் ஏன் இந்த உலகில் தனியாயிருக்கிறேன்? நான் ஏன் என் பெற்றோர்கள் மீது, உடன்பிறந்தார் மீது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/79&oldid=1270255" இலிருந்து மீள்விக்கப்பட்டது