பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கூடிணப்பித்தம் பற்றற்றவனாய் மாறி வருகிறேன்? எனக்கென்ன குறை தேர்ந்தது?. அப்படியானால், நான் யாருடைய ஆசைக்காக, பாசத்துக்காகத் திரிகிறேன்? இது அவனறியாமல் அவன் உள்ளம் தேடித் திரியும் கேள்வி. அவன் தேடித்திரியம் அந்த இனந்தெரியாத நபர் மோகினி மாzைபோல அவனுக்குப் பலதடவை சொப்பன. அவர் தையைத் தந்திருக்கிறாள். இருந்தாலும் அவள் யார்? அவனை நான் ஏன் தேடவேண்டும்? அவள் எங்கே இருக்கிறாள் ? இதற்கு விடை காணாவிட்டாலும், இந்த அலைக்கழிப்புக்குக் , காரண மான உண்மையை, அவன். ஒருநாள் இரவு கண்டு பிடித்துட்டான். தான் ஒரு மனிதனாக ஒரு ஆண்மகனாக மாறிவிட்ட உண்மையை அவன் அறிந்து கொண்டான். உடனே மனசில் ஒரு தெம்பு; ஒரு உற்சாகம்... 'நான் தனியே . இருக்க முடியாது, அவளைத் தேடிக் காண்வேண்டும் என்று , ஒரு ஆணவ வைராக்கியம். அது அந்தப் பருவத்தின் கோளாறு இல்ல; வளர்ச்சி, - இந்த உண்மை அவனுக்குத் தெளிவானதும் அவன் மாசிலும் பற்பல சம்பவங்கள் நிழலாடின. மூன்று வருஷங் களுக்கு முன்னால் அம்மா சொன்ன வார்த்தைகளின் கருப் டொகுகள் விளங்கிற்று. அவனது மைத்துனி கோகிலா சமயம் பார்த்துத்தான் சடங்கானாளாம் ஆனால் இப்போது அவனுக்கு அம்மாவைப்பற்றியோ, கோகிலாவைப்பற்றியோ நினைவு இல்லை; ஆனால் நிர்மலா- அவனுக்கு அந்த ஒருநாள் இரவுச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அன்று ஏதோ கோளாறினால், மின்சார விளக்கு அணைந்து' போய்விட்டது. அவனும் நிர்மலாவும் இருளில் ஒருவர் முகம் : தெரியாமல் இருந்தனர். அப்போது நிர்மலாவின் கர ஸ்பரிசம் ரங்க தா தன் மீது பட்டது. அவன் சுரீரென்று கையை இழுத்துக் கொண்டான்... ரங்கா!” மெல்லிய சப்தம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/80&oldid=1270256" இலிருந்து மீள்விக்கப்பட்டது