பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் தேன்? மாய்ந்துவரும் என் தாய்மையைக் காப்பாற்றுவதற் காகச் செய்த இறுதி முயற்சியா? நெருங்கி வரும் பேரிளம் பெண் பருவத்திலிருந்து தப்பிக்க என்று கணி, என் பெண்மை இளமையைத் தேடிப் பின்வாங்கியதா? அதனால் தாள் நான் என்னை அலங்கரித்தேனா? அதனால் தான் நான் ரங்கநாதன் போன்ற இளைஞனைக் காதலித்தேனா?......." 'அவளுக்குத் தன் அனுபவ ரேகையில் உண்மை ஒளி தோன்றுவதாகப்பட்டது. தன் , மனமாறுதலுக்குக் காரணம் இயற்கைதான் என்று உணர்ந்தாள், ஆளுல் இயற்கை வஞ்சித்ததா? இல்லை,. . வாழ்வித்ததா? அது அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவள் அந்தச் சுகத்தில் ஆனந்தம் கண்டYள். “ ஆனால் ரங்கநாதன் போன்ற இளைஞன் தன் வயது வந்த. பெண்ணைக் காதலிக்காமல், என் காதலை எப்படி ஒப்புக் கொண்டான்? அதன் காரணம் என்ன? அவன் ஆண்மை எய்திய இளைஞன். பசிகொண்டு. இரைதேடித் திரிந்த அவன் 'ஆண்மைக்கு நான் தான் , அகப்பட்டேனா? இல்லை, அவன் இளைஞன். பேய் வேகத்தில் வளர்ந்து வரும் ஆண்மைக்கு உடனடியாக ஒரு பிடிப்பு வேண்டும்; அதற்கு நான் தான் கைகொடுத்து உதவினேன்.. அப்படித்தானா?... இல்லை, நான் 'இளமையை நாடி' அலைக்கழிந்தேன் -- அவன் ஆண்மைப் பாதையில் முன்னேறிக்கொண்டு வந்தான். நாங்கள் இருவரும் சந்தித்தித்துக் கொண்ட ஸ்தலம் நீரு திரிசங்கு மண்டலம், 'அதையே நாங்கள் சொர்க்கமாக்கிக் கொண்டோம், அப்படியானால், நாங்கள் மீண்டும் விலகிவிடுவோமxr? பிரிந்து விடுவோமா? எதிரெதிராக வரும் இரு சக்திகள் ஒரு இடத்திலே சந்தித்தால், ஒன்று, அவற்றின் போக்கே நிற்க வேண்டும். அல்லது, மீண்டும் எதிரெதிராகச் செல்ல வேண்டும். நாங்கள் எங்கு செல்லப்போகிறோம்? ரங்கநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/83&oldid=1270259" இலிருந்து மீள்விக்கப்பட்டது