பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விற்கே ஒரு நாள் தான் ஏதாவது என்று "இன்னும் இரண்டு நாளைக்குள் ஜோலி முடிந்தால் தான் ஏதாவது கிடைக்கும். தீபாவளியையும் சமாளித்துக் கொள்ளலாம்” என்று தனக்குத்தானே தீர்மானித்துக் கொண்டதின் பயனாகத்தான் அவர் இரவுங்கூட, முழுநேர வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் தொழில் நெசவுத் தொழில், உலகத்தாரின் மானத்தைக் காக்க உதவும் புண்ணியாத்மாக்களில் அந்தப் பிரகிருதியும் ஒருவர். அவர் இரவு "டகடக், டகடக்!” பாவினூடே, நூலிழைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன.

இழுத்து இழுத்து அடித்து, அவருடைய காலும் கையும்

ஓய்ந்துவிட்டன. கையையும் காலையும் ' உதறிவிட்டுக் கொண்டு, பொடித் தடையைத் தடவினார். ஆனால், மீண்டும் உறியப் பொடியில்லை. , ' சலித்துப்போன மனதுடன், அப்படியே கண்ணைச் சுழற்றும் தூக்கத்திலே, சுவரில் சாய்த் தார். அவருடைய சிந்தனை என்னவெல்லாமோ பின்னி. நெய்ய ஆரம்பித்தது. ' • *சே! தீபாவளியாம். தீபாவளியும் திருக்கல்யாணமும் யாருக்கு ' வேணும்? , அன்றன்றைக்குப் - பாட்டைக் கவனிப்பதற்கே வழியைக் காணோம். தின்று - கொழுத்த , முண்டங்களுக்கு, இது சரிதான். ஆனால், நம் டேமான்த வனுக்கு இந்தக்,..கட்டை பூமியிலே சாயுற... நான் தான் , தீபாவளி!” - - - ::, 'ஃ , ஆனால் - இந்த வறட்டு ஆராய்ச்சிக்கு அவருக்கு நேரம் ' - கிட்டித்து வந்த தூக்கத்தை ஒரு. 'உலுப்பூ' உதாப்பி விரட்ட முயன்று கொண்டே முன்னே பார்த்தார். : , , 6 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/87&oldid=1270263" இலிருந்து மீள்விக்கப்பட்டது