பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கூடிணப்பித்தம் - தறிக்கு அந்தப்புறம் மனைவி குழந்தைகள் எல்லாரும் படுத்துத் தூங்கு கிறார்கள். அந்தப் பல ஜீவன்களை மகிழ்விப்படம் தற்காக, இந்த ஒரு ஜீவன் தன்னை த்தானே நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. , “பெண்ஜாதி? நான் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்? - என்னுடைய முட்டாள் தனமா- இல்லை சமதச் சந்தர்ப்ப நெருக்கடியா?-எதுவுமிருக்கட்டும், இப்போது எனக்கு எல்லாம் கசந்துபோய்விட்டது. இல்லாள் - அகத்திருக்க இல்லாததொன்றுமில்லை'-இது எந்த மடச்சோணகிரி சொன்னதோ, தெரியவில்லை. என் வீட்டிலோ, அந்த இல்லாள் மட்டுந்தான் கண்டது மிச்சம்... " . **கழத்தைகள்! மனுஷனுடைய நிலைமையை அறியாமல், இந்த உலகத்தைப் படைத்தானாமே, ஒரு போக்கிரி-- அவன் அனுப்பிவைத்த அழைக்காத விருந்தாளிகள் தானா? சே! நொந்துபோன மனவேதனையை மறக்க எண்ணி, முன் என்றோ ஒருநாள் மனைவியின் முன் கொஞ்சம் மனுஷத்துவம் காட்டியதின் பயன, இவை! காதல் எனும் மரத்தை அனைத்து வளரும் புல்லுருவிகள் தானா, குழந்தைகள்? அன்றைக்கு அந்த சுப்புத்தாயி கர்ப்பத் தடையின் அவசியத் தைப்பற்றிப் பேசினாளே, அது ரொம்பவும் சரிதான்,, பஞ்சமும் நோயும் சூறையிடும்போது, பிள்ளையென்ன, . பிள்ளை? மனிதனுடைய சரீரப் பசியின் கோர விளைவுகள்" தானா? குழந்தைகள்?...........சே! என்ன இது. என்னுடைய உயிர் தானே அதோ கூறுகூறாகப் பிரிக்கப்பட்டுக் கிடக் கி றது. என்னுடைய ஆத்மப் பரிபாகந்தான், அவர்கள்! சுப்பையா முதலியார் கண்களைச் சுழற்றிக் குழந்தை களைப் பார்த்தார். மடல் பிளந்த மக்காச் சோளக்கதிரின் உள்ளிருக்கும்' 'மணிகளைப்போல் அந்த அரிசிப்' பற்கள் வெளியே தெரியும்படியாய், மூத்த பையன் சொப்பனத்திலே சிரித்துக்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/88&oldid=1270264" இலிருந்து மீள்விக்கப்பட்டது