பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்பித்தம் பார்த்துவந்த குமாஸ்தா உத்தியோகம்; ராஜம்மா அல்ல! சர்க்கார் சட்டப்படி தினம் ஏழு மணி நேர வேலையென் றலும், அதற்காக ஐந்து மணிக்கே கோட்டை மாட்டிக் கொண்டு அவனால் கிளம்பிவிட முடியாது. மேல் உத்தி யோகஸ்தரின் கெடுபிடிக்குப் பயந்து சமயங்களில் ஏழு எட்டு 4. மணிவரை வேலை பார்த்துவிட்டுத்தான் திரும்புவான் ராகவன் ! காலையில் பரக்கப் புரக்கச் சுடுசாதம் சாப்பிட்டு .. விட்டு, மத்தியானம் ஆபீஸ் காண்டீனில் ஒரு கப் காப்பியோ, டிபனோ சாப்பிட்டுவிட்டுச் செக்கு மாடு மாதிரி திரும்பிவரும் . ராகவன் உடம்பில் ரஜோ குணம் இருக்காது. பசியின் பிடுங் கலால் தமோ குணம்தான் இருக்கும். வயிற்றில் பசி எடுத் தால் காமம் படுத்துவிடும்; சோபநாடி படபடக்கும். இந்த நிலைமையில் ராகவன் வீடு திரும்பினால், அவனது த.ேar குணத்தைப் பசியாற்றுவதன் மூலம் உள்ளடக்கி, ரஜோ தாடியைத் தட்டி யெழுப்புவது சகதர்மிணியின் கடமை, ராஜம்மாவோ பட்டணக்கரைப் பிறவி! எனவே அந்த ஞானம் அவ்வளவாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. எனவே அவள் சர் வாலங்கார பூஷிதையாக ஒலிப் பூ முடித்த சிங்காரியாக வந்து ஸ்பரிச சுகம் காட்ட வந்தால், காமத் துக்கும் குரோதத்துக்கும் பகைதான்' மூளும். ரஜோகுணம் தன் பலத்தைச் சேகரிப்பதற்குள் தமோ குணம் அவள்மீது 'சீறிப் பாய்ந்துவிடும். தன் புருஷன் ஏன் இப்படி எரிந்து விழுகிறான் என்பது அவளுக்குத் தெரியாது; அதுபோலவே தனக்கு ஏன் இந்தச் சிடு சிடுப்பு ஏற்படுகிறது என்பதும் ராகவனுக்குத் தெரியாது. அவர்கள் இருவரும் மனோதத்து வத்தைக் கண்டார்களா? 'ரஜோ தமோ சத்வகு' சொ 5 பங்களைக் கண்டார்களா? எனவே அவர்களுக்குள் அடிக்கடி சிறு சண்டைகள் - ஏற்படுவதுண்டு. சண்டை பிடித்து ஓய்ந்த பிறகு ராகவன் சமயங்களில் ராஜி, இன்னம் என் மேலே கேrகமா? என்னமோ க்ஷணச்சித்தம், க்ஷணப்பித்தம் என்பார்களே அந்தப் புத்தி எனக்கு, கொஞ்சம் முகத்தைத் திருப்பேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/9&oldid=1270184" இலிருந்து மீள்விக்கப்பட்டது