பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம் தவீதி விழுந்து, அந்தரத்திலே தொங்கும் சிலந்தியைப் போல், வானத்தில் விடிவெள்ளி தொங்க ஆரம்பித்தது.. சீமை எண்ணெய் விளக்கு போஜனமற்று மங்கிப் படர்ந்து எரிய ஆரம்பித்தது. சரி, நேரமாகிவிட்டது என்று உணர்ந்துகொண்டே தறிவை விட்டு வெளியேறினார் முதலியார். " சாகாகா” என்ற சப்தம் சூரியனின், வரவிற்குக் கட்டியம்

    • நல்ல சகுவந்தான், காக்கா வலம் பாயுது. போயிட்டு.

வாருங்க” என்று வழியனுப்பினால் முதலியாரின் மனைவி. , நெய்து முடிந்த, விற்பனைக்குத் தயாரான சேலை - மூட்டையை எடுத்துக்கொண்டு, தெருவில் இறங்கினார் முதலியார். - மனத்திலே ஏதோ எதிர்பாராத சம்பத்தை அனுப் விக்கும் முன்ருசி தட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. தன் னுடைய உழைப்பின் சிருஷ்டி, தனது வயிற்றை நிரப்பிவிடும் என்ற நம்பிக்கை களி கொண்டிருந்தது. " - "சேலை நயம் சேலை!>> இந்த மந்திரத்தை அவர் பூர்ண நம்பிக்கையோடு தான் உச்சரித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரை யாரும் கூப்பிடு வதாகக் காணோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/90&oldid=1270266" இலிருந்து மீள்விக்கப்பட்டது