பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம் என்ற அடிகள் முதலியாரை வசீகரித்தன. கூன் விழுந்த உள்ளம் மீண்டும் எழுந்து நின்று பார்த்தது. ""ஆண்டியும் கொண்டாட வேண்டும். - நாமென்ன ஆண்டியை விடவா, கேவலமாப் போயிட்டோம். சே! எப்படியும் தீபாவளி கொண்டாடித்தான் தீரவேண்டும்?”. அவர் மனதில் மீண்டும் உற்சாகம் முளைத்தது, களைப்புத் தீர்ந்த, அவர் கால்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தன், ' ..

**சேலை! நயம் சேலைr>> --

ரொம்பவும் நம்பிக்கையோடு கூவிக்கொண்டு சென்றார். எங்கு அலைந்தாலும் விற்றுவிடத்தான் வேண்டும் என்ற திடசித்தத்தோடு போனார். ... ஆனால், தெருக்காட்டில், விற்பதாகத் தெரியவில்லை மேலும் அலையக் காலில் தெம்பு இல்லை. ::: ' ' , " : ": சந்தைக்குப் போனால் எப்படியும் விற்றுவிடலாம்" என்று தோன்றியது. . சந்தைக்குச் சென்று, கட்டவேண்டிய கட்டணத்தைக் கட்டிவிட்டு, கடையைப் பரப்பினார், அவர் ஆயுளிலேயே அதுதான் கடை பரப்பி விற்பது. விற்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரை அப்படியெல்லாம் பண்ணத் தூண்டிற்று. - சந்தையிலே, பெரிய வீட்டுப் பெண்கள் மட்டுமா வருவார்கள், அவர்கள் ஒருவருக்காவது இவருடைய சேலை பிடிக்காமலா போய்விடும்? சில பேருக்கு அவையிடித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/94&oldid=1270270" இலிருந்து மீள்விக்கப்பட்டது