பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 க. அயோத்திதாஸப் பண்டிதர் நமது நாட்டு உண்மையான சரிதத்தைப் படித்துப் பாருங்கள். நமது தேசத்தில் பிறந்து சர்வ சுகமு மிழந்து, மநுஷர்களுக்காக பெருந்துன்ப மடைந்து, நம்மை முன்னேற்ற பாடு பட்ட சித்தார்த்த பெருமான் தனதருங் கரத்தில் ஒடேந்திய விந்தையை யூன்றிப்படி யுங்கள். அவருடைய திவ்ய சரித்திரமே சில முட்டாள்களால் பலவாறு வரைந்திருக்கின்றார்களென்பது புலனாகும். ஏழை வள்ளுவர்களுடைய கரபோலீசன் கதையை அபகரித்துக் கொண்டிருக்கின்றீர்களா? அல்லது பவுத்தர்களும் டைய சுத்த சரிதத்தை எடுத்து கரைப்படுத்தி யிருக்கின்றீர்களா? என்று படித்துப் பாருங்கள். தயவுசெய்து வள்ளுவர்களுடைய கர போலீசனை அவர்களுக்கு ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் கபாலீசன் கதையை நீங்களே படித்துப்பார்த்து உண்மை குருவாகிய புத்தகபகவானைப் பின்றொடர, சுதேச தெய்வ சுய சமதர்ம தூதர்கள் வேண்டுகின்றோம். அத்தியாயம் 4 சித்தார்த்தர் பெருந்துறவு இந்திய சகோதரிகளே! சகோதரர்களே! அன்புடன் இந்நூன் முற்றும் படித்தறியுங்கள். அப்போதுங்கள் உரிமை யான உண்மையான தர்மராஜனும், அவரது குன்றாத் தர்மமும், தர்ம நெறியை ப்ரவர்த்தனஞ் செய்யும் உத்தம் சங்கத்தார்களும், வெளிப்படையாகத் தோன்றுவார்கள். சத்தியத்தைப் பின்பற்ற உங்களுக்குத் துணையாக விருப்பார்கள் அத்தர்மம் உங்களுக்கும் எங்களுக்கும் அல்லது நமது எல்லா சகோதரிகளுக்கும் மத்தியில் ஒரு சூரியனைப்போல், நம் தர்மராஜனால் வைக்கப்பட்டுள்ளது. அது எல்லாருக்கும் சொந்தமானது. அத்தர்மத்தில் பகவான் அன்பு விளங்க " நீங்களாகிய என் சகோதர சகோதரிகள் ஒருமிக்க சேர்ந்து நீங்கள் கண்ட உண்மையை உலகத்திற்குப் போதிக்க கடமைப்பட்டிருக் கின்றீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. நமது தேச தர்மராஜன் சத்தர்மம் இந்தியர்களாகிய பவுத்தர்களுக்குத்தான் சொந்தமெனப் பிரிக்கப்படாது. இந்தியாவிலுள்ள மற்ற மதஸ்தர்களுக்கும் ஜாதியார்களுக்கும் தர்மம் உரியதாகும்.