பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று 1.35 அவன் பொய்சொல்லா வாசகனென்றும் ஓர் புராண மியற்றி யிருக்கின்றார்கள். இதற்கு முன்னுள்ள சரித்திராதாரங் கிடையாது. இதின் உற்பவமோ சாலிவாகன சகாப்தம் 2446-ம் வருடத்தில் நெல்லூர் வீரனென்னும் ஆசுகவிராஜ ரவர்க ளியற்றியதாகக் குறிக்கப்பட்டி ருக்கின்றது. இற்றைக்கு ஏறக்குறைய 406 வருடங்களுக்கு முற்பட்... காலவரையாம். செய்யுட்களின் பேதங்களோ புராதனப் புலவர்கள் செய்யுட்களாகக் காணாமல் தற்காலப் புலவர்கள் செய்யுளாக விளங்குகின்றது. எவ்வகையிலென்னில் செந்தெண் மெயுடைய அறஹத்துக்களை வடமொழியில் பிராமணர்க ளென்றும், தென்மொழியில் அந்தணர்களென்றும் பூர்வச் செய்யுட்களில் வழங்கி யிருக்கின்றார்கள் இவ்வரிச்சந்திர புராணத் தமிழ்ச் செய்யுளுள் பிராமணனெனக் கூறியிருக்கின்றார்கள். இதனால் அரிச்சந்திர புராணம் நவீன கதையேயாகும். நகரச் சிறப்பு-பாட்டு 7. கிள்ளை பாடுவ கீதங்கள் சாரிகைப் பிள்ளை பாடுவ வேதம் பிராமணர் கொள்ளை பாடுவ ரின்னிசைக் கோதையர் வள்ளை பாடுவர் மன்னவன் வண்மையே. இப்புராணச் செய்யுட்களிற் சிலது அவர்கள் மதசம்மத மாகவோ, ஜாதியாசாரப்படியோ, மாடுகளை நெருப்பிலிட்டுக் கொன்று சுட்டுத் தின்னும்படியானவர்களாக வும், கொலையாளர் களாகவும் காட்டிக்கொள்ளாமல், இந்திய தேச தெய்வ சுயமரி யாதையான பௌத்த தர்ம காவியச் செய்யுட்களைப் பார்த்துக் கொண்டே இந்த கொலையாளர்களும் யோக்கியரென்று பஞ்சசீலத்தைப் பரக்க பாடியிருக் கின்றார்கள். ஆயினும் இந்நூல் பொய்ப்பாதகங்கொண்ட கதையேயாகும். நாட்டுச்சிறப்பு - பாட்டு 6, கள்ளங் கொலைகட் புலைகாம மென்றைந்து மற்ருர்க் குள்ளந் தெளிந்தோர் தருமுத்தமதான மென்னப் பள்ளந் திடர்மால் வரைகானகப் பக்க மெங்கும் வெள்ளம் பெருகிப் பரந்தோடி விரைந்த தன்றே.