பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரிச்சந்திரன் நிஜானுபவசாரம். திரு ம. அரங்கசாமி பண்டிதர் எழுதியது. எமது பிரிய: சகோதரர்களே அரிச்சந்திரனைப்பற்றிப் பேசப்புகில், பிறப்பு வளர்ப்பு இருப்பு முதலிய யாவு மறி பாவேண்டியது. ஆனால் இவ்வரிச்சந்திர அரசாண்டது அயோத்தியென்று மாத்திரம் சரித்திரமூலமாய்த் தெரிய வருகின்ற தல்லாமல் இன்ன காலம் இன்ன வருடமென்று புராணாதி சாட்சி கிடையாதாயினும், இராமனுக்கு முந்தி சில தலைமுறைகள் கடந்த பாட்டனாக, பாரத இராமாயண இதிகாசங்கள் மூலமாயறியலாம். அதைச் சற்று நோக்குங்கால், இராமன் தகப்பனாகிய தசரதன் 60,000 வருடம் அரசாண்டதாய் இதிகாசம் முறையிடுகின்றது. அப்படி ஒரு மனிதன் 60,000 வருடம் ஜீவனோடு அரசாண்டானென்னுங் கற்பனையை நம்பத்தக்கதோ வென்று அறிவுள்ளவர்களே யுணர்ந்துகொள்ள வேண்டு மல்லாது அதைப்பற்றிப் பேசுவது அநாவசியம், ஏனெனி லிவர் தகப்பன் இவருக்கு முந்தியென்று ஆயுளைக் குறிக்க யிடங்கொள்ளாது. இப்படி யே இவர்கள் வேத சாஸ்திர கற்பனைப்படி அநேகவித சாமிகளையுந் தேவர்களையும் முண்டாக்கி அவைகட்கியைந்த மந்திரக் கிரியாதிகளினால் தாங்களழைக்கின்றபோது வரவும், தங்களே வலைச் செய்யவும் கேட்ட வரங்களைக் கொடுக்கவுமான வசிய சித்திப்பெற்று, மேலவர்களென்று அநுசரித்துக்கொண்டு. அநேகசாதிப் பிரிவை யுண்டாக்கி, மதாபிமானஞ் சாதியபிமான மின்றி, நாம் ஏகதந்தையின் சகோதரர்களென்று சொல்லப்பட்டவர்களைத் தாழ்ந்த சாதியெனவும், நீர்சரென்வும் திரமிடம் சென்னை இராஜதானியிலேயே பெரும்பாலும் கூறுவர். இந்த விபரீதம் இவ்வாறிருக்க, அரிச்சந்திரனானவர் இன்ன காலத்தில் இத்தனை வருடங்களுக்கு முன் வைது பின்னாவது அரசாண்டி ருந்தா ரென்று குறிக்காததற்குக் காரணம் அக்காலத்தில் சோதிட