பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

163



செய்துவருவதே கண்காணி யல்லவா? அப்படியென்றாலுமோ; இயமன் ஆதிமுதற்புலையனாயும் அந்தப் புலையனிடத்தில் அடிமைத்தொழில் செய்தபடியினாலேயே அரசனுக்கும் புலையனெனும் பேர் வந்ததைப்போல அந்த பரம்பரைக்கு மப்படியே வந்தது ஆகையால் ஆதிமுதல் இயமனுக்குப்பேர் ஆதித்தன், அரி, ஆரியன், சூரியனாகும். இத்தனை வஞ்சனைப் பேருங்கூடி திரண்டோர் வடிவான அரசனே புலையனென்பதற்கு இவன் சந்ததியே புலையரென்பதற்கும் அரிச்சந்திரன் சரித்திரமும், இன்னுமநேக சாஸ்திரங்களுமே போதுமான சாகூரியாயிருக்கின்றன. ஆகையால் எமது பிரிய சகோதரர்களே! பூர்வ குடிகளாகியவர்கள் ஆதி எமப்புலையரும் அவர்களின் சந்ததியுமானவர்களின் சகவாச கிரியாசாரங்களை விட்டு, நன்முயற்சியினால், முன்போலவே சந்திர வம்மிசத்தவரென்று கடவுளுக்கும், அரசாங்கத்தாருக்கும், பூர்வகிரந்தப்படி இருதய சாக்ஷிக்கு சத்தியமுள்ள ஏக சகோதரர்களாயும் வெளிவரும் படிக்கு, நமதொன்றான சைதன்னிய சாட்சாத் கடவுளைத் (புத்தரை) தியானித்து வருவோமாக.