பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

க. அயோத்திதாஸப் பண்டிதர்



இவ்விரண்டினுள் உருவகத்தோற்றச் செயல்களாகும் தோன்றல், மறைதல், வளர்தல், கருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதலென்னு மித்தொழிலாகுந் தோற்றத் தையே உயிருடன் இரண்டிற்கும் ஒத்தகுணமென்று வகுத்துள் ளார்கள். உயிரில்லா பொருட்குணமாகும் இருகோணம், முக்கோ ணம், வட்டம், சதுரமென்னும் வடிவங்களையும், துற்கந்தம், நற்கந்தமென்னும் நாற்றங்களையும் ; வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை என்னும் ஐவகை வருணங் களையும், கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்னும் அறுசுவைகளையும், வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, தின்மை, நொய்மை, சீர்மை, இழிமை என்னுமெட்டு ஊறுகளையும் உயிரில் பொருட்குணமென வகுத்துள்ளார்கள்.

உடலுயிரென்னு மிரண்டினுள் உயிரென்னும் செயலற்ற விடத்து உடலசையாமலும், உடல் தோற்றி யசையாவிடத்து உயிரென்னும் பெயரற்றுப் போவதால் ஒற்றுமை நயத்தால் ஒன்றென்றும், வேற்றுமை நயத்தால் இரண்டென்றும் வழங்கிய உருவக மனிதனை ஆன்மமென்றும், புருஷனென்றும், பொதுப்பெயரால் வழங்கி வந்தார்கள்.

பஞ்சஸ்கந்தங்களா லமைந்துள்ள புருஷனுக்கே ஆன்ம னென்றும், ஆத்தும னென்னும் பெயருண்டாயிற்று. மானுட வுரூவக தோற்றமுண்டாயவிடத்து ஆன்மமென்னும் பெயருண் டாயதன்றி தோற்ற முண்டாகாவிடத்து ஆன்ம மென்னும் பெயரில்லை.

இத்தகைய உடலுயிரென்பவற்றுள் தான் கற்றவை களையும், கண்டவைகளையும் சிலகாற் சென்று சிந்தித்தபோது கொடுக்குங் குணத்திற்கு உள்ள மென்றும், அவ்வுள்ளமே விரிதலும், மறைதலுமாகிய குணத்திற்கு மனமென்றும், அவ்வகையால் விரியும் மனதை சற்று தடுத்தாளுங் குணத்திற்கு மதியென்றும், அம்மதியைப் பெருக்கி இஃது நன்கு தீதென்று தெளிந்து தேறுங் குணத்திற்கு அறிவென்றும், அவ்வறிவின் பெருக்கத்தால் உடலுயிர் இரண்டிற்கும் நிகழும் பிணி மூப்புச் சாக்காட்டினாலுண்டாகும் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்