பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

க. அயோத்திதாஸப் பண்டிதர்



பட்டினத்தார். மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வான் குருவும் கோனாகி என்னை குடியேற்றுக்கொண்டனன் குற்றமில்லை போனாலும் பேரிருந்தாலு நற்பேரிது பொய்யன்றுகா ணானுலு மிந்த வுடம்போடிருப்ப தறுவெறுப்பே. இத்தகைய அரஹத்துக்கள் ஆதியாகிய குருநாதனைப்போல் புறமெய் யகற்றி உண்மெய் ஒளியாய் அகண்டத்துலாவி நட்சேத்திரம் பெற்றிருக்கின்றார்கள். அகஸ்தியர் நன் மாணாக்கனுக்கு சுழி முனையாம் வேத அந்தத்தில் உபநயனமளித்து சாதனத்தை போதித்த பாடல் பண்ணினால் ஜடம் போகா தெத்தனை நாளாய் பலவாக மௌனத்தை விரித்துச் சொல்வேன். ஒண்ணினால் மௌனத்தில் ரவியைப்பாரு உருகி யல்லோவகண்டத்தின் வெளியைக் காட்டும் கண்ணினால் ஜடங்காணும் பிடிக்கப் பொய்யாம் கற்பூர தீபம் போல் ஒளியாய் நிற்கும் தண்ணினால் சாய்கையில்லை யகண்டமாவாய் சச்சிதானந்தமென்ற தேகமாமே, சீவகசிந்தாமணி தேய்வககதி செய். 2800) இதுவே தெய்வகதி என்னப்படும் திருவிற் பொற்குலார் தேர்ந்தார் தேவர்தன் தண்மைச் செப்பிற் கருவத்து சென்று தோன்றார் கானிலந் தோய்தல் செல்லா ருருவமே லெழுதலாகா வொளியுமிழ்ந் திலங்கு மேனி பரிதியினியன்ற தொக்கும் பன்மலர் கண்ணிவாடா. மச்சழனியார் ஞானம் கேட்டறிந்துக் கொள்வீடென்ன காடென்ன கெட்டிப்பட்ட மௌனத்திலே நின்று மாட்டறிந்துக்கொள் வஸ்துவை யுண்டு நீ மனதைத்தாண்டி யறிவுக்குள்ளேச் செல்லப் பூட்டறிந்துக்கொள் பொன் போல தேகமாம் புத்தியோடு மகண்டத் துலாவலாம்