பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

31



ஆட்டறிந்து கொள் கற்பூர தேகமாம் அகண்ட சோதியும் சித்தியுமாச்சுதே. பாம்பாட்டி சித்தர் செய்.19. வச்சிரத்திற்கோர் பழுது வாய்க்கு மாயினும் வல்லுடம்புக் கோர்குறைவு வாய்த்திடாது மெச்சுஜட முள்ள வெங்கள் வேத்குருவின் மெல்லடி துதித்துநின் றாடாய் பாம்பே. ஒளவையார் ஞானக்குறள். செய். 22 வெள்ளி பொன்மேனிய தொக்கும் வினையகன்ற உள்ளுடம்பினாய வொளி. புத்த சங்கத்தோருள் சமண நிலை கடந்து அரஹத்துக் களென்னும் அந்தண நிலையடைந்து இருபிறப் புண்டாய் சுயம்பிரகாசமா யந்தரத் துலாவுகின்றார்கள். இவர்களையே சீவன் முத்தர்களென்றும், சீவகர்களென்றுங் கூறப்படும். சிலப்பதிகாரம் 27. நீர்ப்படைக்காதை. வரி 92 தண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன் புண்ணியதானம் புரிந்தறங்கொள்ளவும். சுருதி முடி வென்றும், மறைமுடி வென்றும், வேத அந்தமென்றும் வழங்கும் வேதாந்தத்திற்கும், அஷ்ட சித்துக் களின் அந்த மாம் சித்தாந்தத்திற்கும் மத்தியில் தேகத்துடன் அந்தரத் துலாவுவோர்களே சித்தர்களென்றும், சாரணர்க ளென்றும் அழைக்கப்பெற்றார்கள். இதையநுசரித்தே தாயுமானவர் சித்தர்களை தியானிக்குங்கால் "வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர்கணமே” என்றுங் கூறியுள்ளார். இத்தகைய வேதாந்திகளும், சித்தாந்திகளும், தற்காலமெங்கேனு முளரோ வென்று சாவுவாறு முண்டு. அவர்கள் உண்டு இல்லை என்பதை சாந்தம், ஈகை, அன்பெனும் காருண்ய முகத்தினின்று உபநயனமாம் உள்விழிப் பார்வை யால் அறிந்து கொள்ளலாம்.