பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

க. அயோத்திதாஸப் பண்டிதர்



தாயுமானவர். செய். 48 ஞானகருணாகர முகங்கண்ட போதிலோ நவ நாத சித்தர்களும் முன் னட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர் முதன் ஞானிகளு முனை மெச்சுவார். இதய சுத்தத்தாலும், வேதாந்தமாம் உபநயன பார்வையாலும், காமனையும், காலனையும் வென்று பாபத்தை ஜயித்து அரஹத்து, பிராமணர், அந்தணரென்னும் பெயர் பெற்று புளியம்பழம் போலும், ஒடுபோலும் தேகத்தினின்று, மறுபிறப்படைகின்றவர்களெவரோ, அவர்களே இருபிறப்பாள் ரென்னும் யதார்த்த பிராமண வேதாந்திகளாவர். அவர்களே தேவர்கள். ஆதி தேவன். இத்தியாதி சத்திய தன்மங்களைத் தெள்ளற விளக்கி உலக சீர்திருத்தத்திற் காதியாகவும், மக்களின் தெய்வத் தோற்றத்திற் காதியாகவும், மனவமைதியால் பாபத்தை ஜயிக்கும் மார்க்கத்திற் காதியாகவும் சாந்த நிலையமைதியால் அந்தணர்களென்று பெயர் பெற்றவர்களுக் காதியாகவும், நல்லொழுக்கத்தி லுண்டாகும் சகல சித்துக்களினுட் பொருட் காதியாகவும், விளங்கி ஆதி தேவனென்றும், ஆதி கடவுளென்றும், ஆதி வேதனென்றும், ஆதி நாதனென்றும் பெயர் பெற்றவர் ஜகத்குருவாம் புத்தபிரானேயாகும். சக்கிரவர்த்தித் திருமகனாகும் சாக்கைய முனிவர் உலகெங்குஞ் சுற்றி பேரானந்த சத்திய தன்மத்தை வூட்டி சீர்திருத்தியுமிருக்கின்றார். மணிமேகலை காதை 26 வரி52 எண்ணருஞ் சக்கரவாள மெங்கணும் அண்ணலறக் கதிர் விரிக்குங்காலை சிலப்பதிகாரம் காதை. 4 வரி விரிகதிர் பரப்பியுலகமுழுதாண்ட வொரு தனித் திகிரி யுரவோற்காணேன்.