பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

47



தேவர்களுக்கு மேலுலக தேவர்களென்றும், நமக்குத் தோன்றும் தேவர் (பிராமணர் )களுக்கு பூலோக தேவர்களென்றும் சொல்லப்படும். தன்னை, ஒருவன் பிராமணன் என்று சொல்லிக் கொள்வதற்கு, தான் எவ்வகையான பொய் நியாயங்களைக் காட்ட வேண்டுமோ அத்தனையும் அவன் காண்பித்தே தீருவான். அப்படிப்போலவே முற்காலத்தில் இருந்த சிற்சில பெரியோர்கள் தன்னையறியாத மூட பிராமணர்களிடத்தில் தீக்ஷைப்பெற்று உபநயனக் கயிற்றைத் தாங்கி தெய்வநிலையை யடைந்து தேவர்களாய் இருக்கின்றோம் என்று கொடிகட்டி தெருவெல்லாஞ் சுற்றி தன்னை யறிவித்து ஏழைக்குடி களை பலாத்காரமாய் வணங்கச்செய்தார்கள். அவர்கள் சாகுங்காலங் களிலே சமாஜத்தில் சேருவார்கள். அப்படிச் சேருபவர்களுக்கு சமாஜி என்றும் சமாதி என்றும் சொல்லி வைத்தார்கள். முற்கால பிராமணர்களிடத்தில் உபநயனம் பெற்றுத் தெய்வ நிலை யடைந்து தேவர்களாக இருந்து சமாதியடைதலே பிராமணர்களின் அல்லது தேவர்களின் முடி பாகையால், அத்தேவர்கள் செத்து சேரும் இடங்களுக்கு மோக்ஷமென்று வழங்கினார்கள். இந்த மோக்ஷமும், சிவமதம், நாராயணன் மதம், பிரமன் மதம் என்ற மததேவதாஸ்தலங்களாக பாவிக்கப் பாட்டி ருக்கின்றது. இதில் பவுத்தமென்பதும் ஒரு மதமென நினைத்து பார்ப்பார் மத மோக்ஷத்தில் ஒன்றாகக் கணக்குக்கூட்டி காட்டி வைத்திருக்கிறார்கள். திவாகரம் 3வது இடப்பெயர் தொகுதி மோக்கத்தின் பெயர் அமுதங் கேவலம் பருவம் வீடு சிவங்கை வல்லியஞ் சித்திமீ ளாகதி பரகதி யோடுமெய் முத்திபஞ் சமகதி நிருவாண மோக்க மெனநிகழ்த் தினரே. இதில் முதலிலுள்ள ஆறு பெயர்கள் சிவ மதத்தையும், ஏழாவது எட்டாவது, விஷ்ணு மதத்தையும், ஒன்பதாவது, பத்தாவது, பிரம்ம மதத்தையும், பதினொன்றாவது, பன்னிரண்டா வது பெயர்கள் ஜைன மதத்தையும், நிருவாணமென்ற கடைசி பெயர் பவுத்தத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.