பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

க. அயோத்திதாஸப் பண்டிதர்



காதுகளாகும். பிறகு உண்டானது கொம்புகள். காதுகளால் சண்டைச் செய்ய முடியுமா? அல்லது கொம்புகளால் வெற்றி யடைய முடியுமா என்பதை சொந்த புத்தியோடு கவனித்துப் பாருங்கள். பின்னே பிறந்த பவுத்தத்தின் வெற்றியும் அதின் நியாயமும் அதின் ஜனத்தொகையும் நூற்களில் வாசித்தறியுங் கள். அப்போதுங்கள் மனம் செம்மைப்பட்டு சத்தியத்தை நாடி வாழ்வீர்கள். அதுவே நமது இந்தியா தேச சொந்த யதார்த்த தெய்வமாகிய பகவன் புத்தர் கூறும் யதார்த்த பிராமண நிலையாகும். அந்நிலையை அறிந்தவன் தான் சத்தியவந்தன். அவனே பகவன் புத்தர் கூறும் பிராமணன். காக்கைப்பாடியம் ஆதிகாலத் தந்தண னறவோன் போதி வேந்தன் புகன்ற மெஞ்ஞான நீதி நெறியாம் வாய்மையி னின்றோர் சோதி யுன்மைத் தொடருவ ரன்றோ. என்று அறிவு மிகுந்தவனையே பிராமணனென்று நூற் கூறுவதால், அன்புடைய சகோதரர்களே பொய்மையை விலக்கி உண்மையில் அறிவை வளர்த்தி வாழ்ந்துவர சுதேச தெய்வ சமதர்ம தூதர்கள் வேண்டுகின்றோம்.