பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோணத்திலிருந்து புதிய விளக்கங்களை எழுதியும் ஒரு மறு மலர்ச்சியை உண்டாக்கினார்.

தமிழில் அதுவரையிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல அவரால் புதுவிளக்கமும். கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாஸ் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்த வாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப் பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர்.

     பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிந்தனையில் நடைமுறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாஸ்ப் பண்டிதராவார். சுயராச்சியமென்பது பார்ப்பனர்களின் நலன்களுக்கே உதவக்கூடியதாயிருக்கும் என்று பெரியாரும், அம்பேத்கரும் சொல்வதற்கு முன்னதாகவே வலியுறுத்திக் கூறியவர் அயோத்திதாஸப் பண்டிதர். தர்க்கபூர்வமான பார்ப்பனிய எதிர்ப்பையும் முதன்முதலாக முன் வைத்த தமிழ் சிந்தனையாளர் அவரேயாவார்.

     பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நலன்களின் நோக்கில் முன்வைக்கப்பட்ட பார்ப்பனிய எதிர்ப்பென்பது இன்று தனது ஆற்றலை இழந்துவிட்டது. இதை முன்னுணர்ந்திருந்த அம்பேத்கர் இது பற்றி 1944 ஆம் ஆண்டிலேயே பேசியிருக் கிறார். “... பார்ப்பனரல்லாதார் இயக்கம் இந்நாட்டின் வரலாற்றின் ஒர் முக்கிய நிகழ்வாகும். அதேபோல அதன் வீழ்ச்சியும் மிகுந்த வருத்தத்துடன் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிடும் அம்பேத்கர் அந்த வீழ்ச்சிக்கான காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். "இதன் வீழ்ச்சிக்குக் காரணங்களாக இரண்டு விஷயங்கள் எனக்குத் தோன்றுகின்றன. முதலில், பார்ப்பனர்களுக்கும் தமக்குமான உண்மையான வேறுபாடு என்னவென்பதை இவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பார்ப்பனர்களை இவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தாலும் இவர்களுக்கிடையிலான கொள்கை ரீதியிலான வேறுபாட்டை இவர்களால் கூற முடிந்ததா? இவர்கள் பெருமளவிற்குப் பார்ப்பனிய வசப்பட்டிருந்தனர். இவர்கள் நாமம் இட்டுக்கொண்டு தங்களை