பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி

ஆசிரியர் : க. அயோத்திதாஸ் பண்டிதர்

அத்தியாயம் 1

மயிலை குப்புலிங்க நாயனார் கூறும், காபோலீஸன் விபரம். சென்னையைச் சார்ந்த திருமயிலை என்னும் நாட்டில் வள்ளுவர்கள் சாக்கையர்கள் என்ற வம்ஸ வரிசையோர்கள் விசேஷமாகக் குடியிருந்தார்கள். சேந்தன் - திவாகரம் மக்கட்பெயர் வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க் குள்படுங் கருமத் தலைவர்க் கொக்கும் சூடாமணி நிகண்டு வருநிமித் தகன்பேர் சாக்கை வள்ளுவ னென்றுமாகும். அவர்களுக்குள் கொன்றை ராஜன் என்றோர் சிற்றரசன், அந்நாட்டை ஆண்டு வந்தான். அந்நாட்டு பெயர் விளங்க அல்லமா வென்னும் பிரபுவால் ஒர் மடங்கட்டி அதனுள் சயன சிலை ஸ்தாபிக்கப்பட்டது. திருக்கலம்பகம், கட்டளைக் கலித்துறை உரையோம் பயன்செய்வ தற்கென்று வைத்தற மோதும் வஞ்சத் துரையோ டுறாத சுகர்கண் டீர் பொங்கு தூங்கொலிநீர் திரையோ டுருண்டெழு சங்கஞ் சொரிந்த செழுந்தரள நிறையோ டுறங்கு துறைமயிலா புரிநின்றவரே. வருடந்தோறும் மாசி மாத பவுர்ணமி இரவு முற்றும் கண்விழித்து அரசனே துறவு பூண்டு, பிச்சை யாண்டி யாய் இரந்துண்டார் என்ற சரித்திரத்தைப் படித்துக்காட்டி , அடுத்த நாள், அரசனே கரபோல மேந்தி இரக்கவரும் பாவனையாகவும்,