பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி , இரண்டு 99 மற்றபடி கள் குடி யனுகுந் தந்தையும், களவாடு ந் தந்தையும் அப்பா கொஞ்சங் கள் குடி, அய்யா அவன் பொருளை யபகரித்து வாவென்று சொல்லுஞ் சொற்களை மந்திரங்களாகும் ஆலோசனை களென் றேற்கப்போமோ ஒருக்காலும் ஏற்க லாகா வென்பதாம். ஆதலின் ஞானத்தாய் நீதிநெறி யொழுக்கங் களை யநுசரித்தோது முதுமொழிகளையே மந்திரங்களென்று கூறியுள்ளாள். 38. தாய்சொற்றுறந்தால் வாசகமில்லை. தாய் - தன்னையின்ற தாயாரும், வாசக நெறியோதியுள்ள ஞானத் தாயாரும். சொல் - சொல்லியுள்ளவற்றை, துறந்தால் - அவற்றிற்கு மாறுகொள நடந்தால், வாசகமில்லை - ஞானத் தாயோதியுள்ள, திரிவாசகமுமில்லை அவற்றை யநுசரித்துவந்த ஈன்ற தாயாரின் ஒழுக்கமுமில்லை யென்பது கருத்தாம். பெரும்பாலும் நமது ஞானத்தாய் ஒதியுள்ள திரிவாசகங் களை யெளிதிலும், வாசக நடையிலுமுணர்ந்து அம்மார்க்கத்தில் நடந்து வரும் தன்னை யீன்றத் தாயானவள் ஒதுஞ்சொற்களைக் கடந்து நடப்பதாயின் ஞானத்தா யோதியுள்ள திரிவாசகத்தையே மீறி நடந்ததற்கொக்கும். ஆதலின் நீதிமார்க்கத்தில் நடக்கும் தன்னை யீன்ற தாயின் சொற்களை மீறலாகாதென்று கூறியுள்ளாள். கொலையிலும், களவிலும், பொய்யிலும், விபச்சாரத் திலும், குடியிலு மிகுத்தவளைக் கூருது திரிவாசகங்களை யேற்று நடந்த தாயின் மொழிகளையே யிவவிடம் வற்புறுத்திக் கூறியுள்ளாள். 39. திரைகடலோடியுந் திரவியந்தேடு. திரை - அலைபெருக்கில், கடலோடியும் - கடன்மடை திரண்டோடும் வோடத்திற் சென்றும், திரவியஞ் - செல்வத்தை, தேடு - சம்பாதிக்க முயற்சிச் செய்யுமென்பதாம். யாதாமொரு களங்கமும் பயமுமின்றி கடல்மீது கப்பல் யாத்திரைச் செய்து புறதேசங்களுக்குச் சென்று தனது நீதிநெறி யாம் ஒழுக்கங்களில்ை அத்தேசத்தோருக்கு மேலானவனென விளங்கி தனது முயற்சியிலுைம், தேக கஷ்டத்திலுைம்,