பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 க. அயோத்திதாஸப் பண்டிதர் வித்தியா விருத்திகளிலுைம் திரவியத்தை சேகரித்து தான் சுகிப் பதுடன் தனது குடும்பத்தோரையும், தன்னையடுத்துள்ள ஏழைகளையும் ஆதரிக்கவேண்டு மென்னுங் கருத்தால் திரவியந்தேடு முபாயத்தைக் கூறியுள்ளாள். 40. தீராக்கோபம் போராய் முடியும். தீராக்கோபம் - தன்னலாற்ற முடியாக் கோபம், போராய் - பெருஞ் சண்டைக்கேதுவாய், முடியும் - தீருமென்பதாம், தனக்குள்ளெழுங் கோபாக்கினியை சாந்தமென்னும் நீரிலை விக்காமற் போவாயிைன் தனதுள்ளுறுப்புகள் யாவுங் கொதிப் பேறி நடுக்கமுற்று நாசமடைவதுடன் எதிரிகளாற்றனது தேகமும் நையப் புடைக்கபட்டு நசிந்து போவாறென்பதாம். 41. துடியாப்பெண்டிர் மடியினெருப்பு. துடியா - தனது கணவனுக்கு ஆபத்து நேரிட்டகாலத்து பதரா, பெண்டிர் - ஸ்திரியானவளிருப்பளேல், மடியில் - கணவன் தன திடுப்பில் கட்டியுள்ள வஸ்திரத்தில், நெருப்பு - அக்கினியை கட்டியுள்ளா னென்பதற் கொக்கும் என்பதாம். புருடனுக் கோர் ஆபத்து நேரிட்டதென்று கேள்விபட்ட மனைவியின் தேகந் துடியாமலும், மனம் பதராமலும் இருக்கு மாயின் அவளது எண்ணம் பரபுருடனை நாடியிருப்பது மன்றி தனது க்ணவன் சீக்கிறந் துலையவேண்டு மென்னும் நோக்க முடையவளேயாவாள். அத்தகையத் தீயகுண முள்ளாளைச் சேர்ந்து வாழ்தல் தனது மடியில் நெருப்பைக் கட்டிவைத்திருப்பதற் கொக்கும். தன் கணவன்மீது வெறுப்பும், அன்னிய புருடன் மீது விருப்புமுள்ள பெண்டீர் வாழ்க்கைக்குத் துணை நலமாகாதது கண்டுள்ள ஞானத்தாய் துடி யாப் பெண்டிர் மடி யில் நெருப்பென்று கூறியுள்ளாள்.