பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் 4. வேதியர்க் கழகு வோதலு மொழுக்கமும். சத்திய தன்மமாம் சதுர்பேத மொழிகளை ஒதுவோர்க்கழகு யாதெனில், எத்தேச எப்ப்ாஷைக்கரன யிருப்பினும் நீதியும், நெறியும் வாய்மெயும் நிறைந்து சகலருக்கும் நன்மெயை விளக்க வேண்டி யவனுகவும் அன்றேல் ஒதியுணர்ந்த பயல்ை சகலருக் கும் நல்லவனுகவும் விளங்குவோ னெவனே அவனே வேதமோதும் சிறப்புடையானென்பது கருத்து. நல்லாப்பிள்ளை பாரதம். நீதியும் நெறியும் வாய்மெயு முலகில் நிறுத்தினேன் வேதியனன்றி வேதிய னேனு மிழுக்குறி லவனை விளம்பும் சூத்திரனென வேத மாதவர் புகன்ரு ராதலாலுடல் மாய்ந்தபின் பாவதோர் பொருளோ கோதிலர் விந்தப் பிறவியில் வேதக் குரவனியல்லையோ குறியாய். 5. மன்னவர்க்கழகு செங்கோல் நடத்தல். அரசர்களுக்கு அழகாவது யாதெனில், செவ்விய நீதியின் கோலேந்தி தன்னவரன்னிய ரென்னும் பட்சபாதமின்றி நீதியை செலுத்துவதுடன் குடிகள் யாவருந் தனது பாதுகாப்பிலிருக் கின்றபடி யால் அவர்களுக்கு யாதாமோர் தீங்கு நேரிடா வண்ணம் ஆதரிப்பதே மன்னர்க்கு சிறப் பென்பது கருத்து. 6. வாணிபர்க்கழகு வளர் பொருளிட்டல். வியாபாரிகளுக்கு அழகு யாதெனில், ஒன்றைக் கொடுத்து, மற்ருென்றை மாறுவதில் மிக்கச் செட்டுடையவன யிருந்து எக்காலத்திலேச் சரக்கைப் பிடித்துக் கட்டவேண்டியதென்றும் எச்சரிக்கை நிலவரத்திலும், தராசு கோன நிலையிலும் தன் செல வழிவுபோக சொற்பலாபத்திலும் விற்று பொருளை வளர்த்து சருவ சீவர்களுக்கும் உதவியுள்ளோராக விளங்குதல் ஒன்றைக் கொடுத்து மற்ருென்றைப் பெறும் வாணிபர்களுக்கு சிறப்பென்பது கருத்து. 7. வேளாளர்க்கழகு உழுதுாண் விரும்பல். பூமியை திருத்தி பயிர் செய்கிறவர்களுக்கு அழகு யாதெனில், நன்செய் பூமியை யுழுது பயிர் இடுங்கால மீதென்