பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 'I 3 1 17. தெள்ளியவாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணிர்க் கயத்துச் சிறுமீன்சினையினும் நுண்ணிய தாயினு மண்ணல் யானை அணிதேர்ப்புரவி யாட்பெரும் படையோடு மன்னர்க்கிருக்க நிழலாகும்மே. ஆலமரத்தின் விதையானது மீன்சினைக் கொப்பாய சிறியதாயிருப்பினும் அதன் மரத்தின் நிழலோ இரதகஜ துரக பதாதிகளுடன் அரசனும் வந்து தங்குவதற்கு நிழலைத்தரு மென்பது கருத்து. 18. (அதுபோல்) சிறியோரெல்லாம் சிறியோருமல்லர். சிறுவயதாயிருப்பினும் அவர்களை சிறியவர்களென்று அவமதிக்கலாகாது காரணம் விவேகத்தில் பெரியோர்களா யிருப்பார்கள். 19. பெரியோரெல்லாம் பெரியோருமல்லர். வயதில் - முதிர்ந்தோர்களாயிருப்பினும் அவர்களைப் பெரியோர்களென் றெண்ணப்படாது காரணம், விவேக மற்றிருப் பார்கள். 30. பெற்ருேரெல்லாம் பிள்ளைகளல்லர். பெற்றப் பிள்ளைகள் யாவரையும் தன்னுடையப் பிள்ளை களே யென்று நம்பப்படாது. காரணம், தாய் தந்தையரைக் கவனியாது களியாட்டத்திலிருக்கும் பிள்ளைகளுமுண்டு. 21. உற்ருேரெல்லா முறவினரல்லர். மிக்க வுரியவர்களென்று சொல்லும்படியான குடும்பத் தோர் யாவரும் உறவினராகமாட்டார்கள். காரணம் உறவினர் உரிமெயாம் சுகதுக்கங்களைப் பொருத்தி நிற்பர்.