பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 1Ꮾ 3 தென்னிந்தியாவிலுள்ள இந்திர வியாரங்களையும் அரசு விழாக்களையும் அம்மன் உற்சாகங்களையும் பலவகையில் மாறுபடுத்திக்கொண்டு தன்மத்தைச் சாதித்து வந்தவர்களையுந் தாழ்ந்த சாதியாக வகுத்துத் தங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போதித்து தாழ்ச்சியடையச் செய்து தருமங்களையும் மாறு படுத்திவிட்டார்கள். அதாவது அரசு திருவென்றும் போதி பண்டிகையென் றுங் கொண்டாடிவந்த பெளத்தர்கள் அரசமரத்தை யெவ்விடத் திற் காண்கின்ருர்களோ அங்கு சாக்கையமுநிவரைச் சிந்தித்து நீதிநெறியினின்று சுகவாழ்க்கைப் பெற்றுவருவதை புத்த தன்மத் திற்குச் சத்துருக்களாகிய பராயசாதியார் கண்டு அவற்றை மாறுபடுத்திக் கெடுக்க வேண்டுமென்னும் பொருமையால் விவேகமற்றக் குடிகளை நெருங்கி நீங்க ளரசமரத்தடி யில் சிந்திக்கும் முநியாண்டவனுக்கு ஆடேனுங் கோழியேனும் பலி கொடுத்து கள், சாராயம், அபினி, கஞ்சா, சுருட்டு முதலியவை களே வைத்துப் படைப்பீர்களானல் உங்கள் கோரிக்கை நிறைவேறும். அவ்வகை செய்யாமல் வெறுமனே சித்திப்பதால் யாது பயனு மடைய மாட்டீர்களென்று, மான் தோலைப் போர்த்திருக்கும் குக்கலைப்போன்று பெரிய மனிதனெனச் சொல்லிக்கொண்டு திரியும் மிலேச்சர்கள் வார்த்தையை கல்வியற்றக் குடிகள் நம்பி அரசுதிருவின் ஆனந்த சீலத்தை மறந்து கள்ளருந்துங் களவாணியில் நிறைந்து கேட்டுக்குப் போகும் வாசலைத் திறந்துகொண்டார்கள். அதுபோல் அம்மன் விழாவென்றும், வேம்புதிருவென் றுங் கொண்டாடுங்கால் கிராமத்தில் வாழுங் குடிகள் ஒவ்வொரு வரும் பத்துநாள் வரையில் கொலை, களவு, காமம், கள்ளருந்தல், பொய் முதலிய பஞ்சபாதகங்களை யற்றிருக்க வேண்டு மென்னுங் காப்புக்கட்டி ஒன்பது நாள் வரையில் அம்மன் உற்சாகமும் அறநெறியுமூட்டி பத்தாநாள் கிராமக் குடிகளில் வீட்டிற்கு ஒருவர் புதுப்பானைகளும் அரிசி முதலிய வைகளையுங் கொண்டு போய் அம்மன் பீடத்திலும் பொங்கல் வைத்து வாழையிலைகளைப் பரப்பி எல்லோர் பொங்கிய சாதங்களையுங் குங்கமிட்டு ஆறியப்பின் ஏழைகளைப் பசிதீர உண்பிக்கச் செய்து ஆனந்த கோஷத்துடன் அவரவர்க ளில்லங்களிற் சேர்ந்து