பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 6.5 கன்னகைக் கதையையுஞ் சொல்லி பூர்வ நம் மூதாதைகளை மயக்கி நம்மையும் நம் சேரிகளையும், பாழ்ப்படுத்தி விட்டார்கள். அம்மாதர்களின் விர்த்தாந்தங்களையும், நம் அம்மனுக்கு வழங்கி வந்துள்ள வர்ணனையையும் புகழையும் சீர்தூக்கிப் பார்ப் போமால்ை மெய் விளங்காமற் போகாது. கிராமதேவி தோத்திரம் திருவளரு மண்ணவர்க்கு முதல்வி நீயே தேடரிய விண்ணவர்க்கு மாதி நீயே குருபரன லோதியமுப் பிடகந் தன்னை குவலயத்தோர்க் கோதுபிட கறியு நீயே கருமருவு வாணிசர சுவதி யாகி கலாசனத்திவேம் படிய மர்ந்தோய் மருவுநெறி தன்மசங்க வடிய வர்க்கு வல்லபைநின் தீபவொளி யருளு மாதோ தீநெறி யுற்ற மனிதர்களை வழிபட்டு புத்தி கெடுவதை யெக்கழித்து, நன்னெறியுற்ற, நம்நாட்டு தெய்வ தர்ம சாகூவியக் காரியாகிய நம் அம்மனைப் பின்ருெடர சுதேச தெய்வ தூதர்கள் வேண்டுகின்ருேம். காளிகா தேவியின் சுருக்கக்கதை. வட இந்திய பாகத்தில் வங்காளம், காம்போஜம், பப்பிரம் என்னும் மூன்று பெரு நகரங்களையும் சிற்றரசிகளையு மடக்கி அரசாண்டு வந்த காளி என்னு மரசி ஒருவளிருந்தாள். அவள் தன்னரசுக்குள் பல வீர செயல்கள் செய்தாள் அவளின் அரச வல்லபத்தையும் புத்தி கூர்மையையும் அறிந்த அவளினத்தார், அவள் மண்ணுலகை விட்டு மறைந்தபின்னர், அவளுக்கு வாகனம் சிங்கமென்றும், ஆயுதம் வாளென்றும், வல்லமையை பல புஜங்களென்றும் புகழ்ந்து, அரசர்களே ஜயிக்கத்தக்க வல்லமை அருளுகிறவளே என்று தங்கள் ஆயுதங்களை அவள் உருவச்சிலை முன்னில் வைத்து மிருகங்களை பலிகொடுத்து யாங்கள் வெற்றி யடைய வரங்கொடுங்காளி சாமுண்டி மாதுர்க்கையே! என்று வணங்கினர்கள். இந்த மிருக உயிர்வதை பலி பூஜை வங்காள காளிகட்டட மென்னும் அவள் வசித்த அரண்மனையாகிய காளி கோயிலில்