பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க. அயோத்திதாஸப் பண்டிதர் எக்காலுந் தீயகுணங்களையகற்றி நியாயகுணங்களை நிறப்பு வதே நீதி நெறியி னிலைகள்ாம். - குலமென்னும் ஒர் குடும்பத்தில் வஞ்சினம் பொருளாசை குடி கெடுப்பு, களவு மிகுந்திருக்குமாயின் அக்குலத்து சிறுவர் களுக்கும் அக்குணங்களே மிகும். அந்தந்தக் குடும்ப குலத்தின் குணங்களால் அவரவர் களுநபவிக்கும் துக்கங்களையுஞ் சுகங்களையும் அநுபவக் காட்சியா லுணர்ந்து நல்வாய் மெகளைப் பெருக்கி சுகுணங் கண்டவிடத்து அக்குணமதைக் கைவிடேலென்று நற்குன நிலையை வற்புறுத்திக் கூறியுள்ளாள். 37. கூடிப் பிரியேல். கூடி - ஒருவரை நேசித்து, பிரியேல் - அவரை விட்டு நீங்காதே என்பதாம். அவரவர்களுக்குள்ள தீயகுணங்களையும், நியாய குணங்களையும் நன்காராய்ந்து நியாய மிகுத்தோர் பால் நேயம் புரிந்து அவர்களைக் கூடிப் பிரிவதாயின், தீயகுண நிலையே நியாய குணத்தோடு நிலைக்கவிடாது அகற்றியதென்பது கருத் தாகும். ஆதலின் நல்லோரை யடுத்த அவர்களுடன் கூடி நல்லுணர்ச்சி மிகுங்கால் அவர்களை விட்டு பிரியேலென்று கூறியுள்ளாள். 'மூதுரை நல்லாரைக் காண்பதுவு நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவு நன்றே - நல்லார் குணங்களுரைப்பதுவு நன்றே யவரோ டிணங்கி யிருப்பதுவு நன்று. 38. கெடுப்ப தொழி கெடுப்பது - மற்ருேர் குடிக்குக் கேடுண்டாக்குதலை, ஒழி - அகற்றிவிடுமென்பதாம். கெடு எண்ணத்தையும், கெடு தொழிலையும் ஒழித்து வாழ வேண்டிய காரணம் யாதெனில்,