பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 4 I 42. கோதாட்டொழி கோது - உன்னை குற்றத்திற் காளாக்கும், ஆட்டு - விளையாட்டை, ஒழி - எக்காலும் நீக்கிவிடு மென்பதாம். தன்னைத்தானே குற்றத்திற் காளாக்கிவிடும் விளையாட் டுகள் யாதெனில், கள்ளினைக் கூடி குடிக்குங் களி விளையாட் டும் மற்றவன் பொருளை அபகரிக்க சுருங்கி விளையாடும் சூது விளையாட்டும், அடுத்த வுறவோர்கள் முன்னிலும், அதிகாரிகள் முன்னிலும் குற்றவாளியாக ரூபிக்கும் ஆட்டத்தை விளையாடே லென்று கூறி யுள்ளாள். அறநெறிதீபம். சூதுடனே கள்ளருந்துந் தொல்லை விளையாட்டகற்றி ஆதுலர்க்கே யன்னுமளித் தானந்தமாடுதலும் தீதகற்றி யெஞ் ஞான்றுந் தேவ னென போற்றுதலும் போதி நிழல் வீற்றிருந்தோற் போதறத்தின் பயனகும். 43. சக்கரநெறிநில் சக்கர அறவாழியாம் தருமச்சக்கர, நெறி - ஒழுக்கத்தில், நில் - நிலைத்திரு மென்பதாம். புத்தபிரான் அரச புத்திரகைத் தோன்றி சத்திய தன்மத்தைப் போதித்தபடியால் அதனைக் கோனெறி யென்றும், அஃது சகலருக்கும் பொதுவாய தன்மமாதலின் அறநெறி யென்றும், அவர் உலகமெங்கும் சுற்றி அறக்கதிராம் சத்திய தன்மத்தை விளக்கியபடியால் சக்கர நெறி யென்றும் வழங்கி வந்தார்கள். மணிமேகலை தருமசக்கரம் உருட்டினன் வருவோன் அறக்கதிராழி திரப்படவுருட்டிய காமறகடநத வாமன பாதம பொன்னணி நேமி வலங் கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக்களித்த எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும் அண்ணலறக்கதிர் விருக்குங்காலை.