பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கப் பாடல்களை இயற்றிய ஒளவையின் காலமாக கி.பி 150 - 330 வரையிலான பகுதியைக் குறிப்பிடலாம். இவர் விறலியர் குலத்தைச் சேர்ந்தவரெனவும் மன்னன் அதிகமான் நெடுமான் அஞ்சியுடன் நட்பாயிருந்து அரிய நெல்லிக் கனியைப் பெற்றவர் இவரேயெனவும் தெரிகிறது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் இவரது பாடல்களைக் காணலாம்.

கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒளவையின் பாடல்கள் பல ஸ்தலபுராணங்களில் காணப்படுகின்றன. மு. அருணாச்சலத்தின் “தமிழ் இலக்கிய வரலாறு” மூலமாய் அறியவரும் செய்திகளைக் கொண்டு நோக்கும் போது பாரிமகளிரான அங்கவை, சங்கவையைப் பாதுகாத்தவரெனத் தெரிகிறது.

கி.பி. பத்து, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அறியப்பட்ட ஒளவை முதலாம் குலோத்துங்கள் காலத்தில் (1071-1132) வாழ்ந்திருக்கலாமெனத் தெரிகிறது. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலான நூல்களை இயற்றியவர் இதுவேயென அறியமுடிகிறது. நல்வழியில் திருமூலர் மற்றும் சில சைவப் புலவர்கள் குறித்த குறிப்புகள் வருவதால் இது கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கு முன் இருக்க வாய்ப்பில்லையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கொன்றை வேந்தன், யாப்பருங்கலத்துடன் இணையான காலத்தில் (13-ஆம் நூற்றாண்டு) வைத்துப் பார்க்கப்படுகிறது.

இந்த ஒளவையின் பாடல்களே ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்களாகும். (1708)

மத்திய காலத்தில் வாழ்ந்தவரும், சித்தம் யோகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான ஒளவையின் காலம் 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியாக இருக்கலாம். ஒளவைக்குறள் அல்லது ஞானக்குறள், விநாயகர் அகவல் ஆகியவை இவர் படைத்தவை.

ஒளவையைப் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்கிவருகின்றன. திருவள்ளுவரின் சகோதரியென்றும்; உறையூருக்கருகில் பிறந்து தனது அன்னையால் கைவிடப்பட்டு பாணன்