பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 55 றையுணர்ந்து செய்யுஞ் செயலானது, மூவா - என்றுங் கெடாது சுகம் தரும், மருந்து - அவுடதத்தை யொக்கு மென்பதாம். எஜமானயிைனும் தாய்தந்தையராயினும் இன்னதைக் கேட்கின்ருர்கள் இனியதைத் தேடுகின்ருர்களென் றுணர்ந்து அவ்வேலைப் புரிவோர் தேவா மிர்தத்திற் கொப்பானவ ரென்பது கருத்து. 9. ஐயம்புகினுஞ் செய்வினைசெய் ஐயம்புகினும் - பிச்சையேற்றுண்ணுங்காலம் வரினும் அச்சோம்பேரிச் செயலைக் கருதாது, செய்வினை - உனக்குத் தெரிந்த தொழிலை விடாமுயற்சியுடன், செய் - செய்து சீவிக்கக் கடவாயென்பதாம். அதாவது கால யேதுக்களாலும் வியாதிகளிலுைம் செய்தொழில் முயற்சிகுன்றி பயந்து ஒருவரை யிரந்துகேட்க நேரிடும். அவ்வகை யிரந்துண்ணுந் தொழிலையே கடை பிடிப்பதாயின் பிச்சைக் கிடையாவிடத்து களவு சூது வஞ்சக முதலிய துற்கிருத்தியங்களுக் காளாக்கிவிடும். ஆதலின் இரந்துண்ணும் காலம்வரினும் அவனவன் செய்தொழிலில் முயற்சிகுன்ருதிருந்து செய்யக்கூடிய வினையை செய்து சீவிக்கவேண்டுமென்பது கருத்து. 10. ஒருவனைப்பற்றி யோரகத்திரு. ஒருவனை - தன்மெய்தானே, பற்றி - யுணரப்பிடித்து, ஒரகத்து - உள்ளத்தின்கண், இரு - நிலைத்திருமென்பதாம். தன் தொழிலால் தனக்கு போஷப்பும், தன்னை யுணர்ந்து ஒடுங்கலால் தனக்கு சுகமும் உண்டாவதியல்பு. ஏனைய மக்களால் சுகங்காணலரி தாதலின் தன்னொருவனைப்பற்றி தன்னகத்தொடுங்க வேண்டுமென்பது கருத்தாம். அறநெறிச்சாரம் செய்வினை யல்லாற் சிறந்தார் பிரதில்லை பொய்வினை மற்றைப் பொருளெல்லா - மெய்வினவில் தாயார் மனைவியார் தந்தையார் மக்களார் நீயார் நினைவாழி நெஞ்சு.