பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 க. அயோத்திதாளலப் பண்டிதர் நாராயணனே கொலு மண்டபத்திலுள்ள ஒர் துானினின்று வரச்செய்து தமக்கும் தமது தந்தைக்கும் தரிசனங்கொடுக்கச் செய்கின்ருேம். தாங்கள் யாதொன்றுக்கும் பயப்படாது நாராயணன் எங்கிருக்கின் ருனெனக் கேட்குங்கால் இதோ துானிலு மிருக்கின்ருன் துரும்பிலு மிருக்கின்ருனெனப் பெருங்கூச்ச லிடு வீராயின் உடனே நாராயணன் தரிசன மீவாரென்று சொல்லி பிரபவகாதனை யனுப்பிவிட்டு அந்திபொழுதாகி ஆள்முகம் ஒருவருக்கொருவர் தெரியாது மறைவுண்டாம் நேரங்கண்டு வேவுகர்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு யாருமறியாது அரண்மனைக்குள் பிரவேசித்துத் துரண்களின் மறைவில் மறைந்திருந்தான். பொழுதஸ்தமிக்குங்கால் புத்திரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் சமண முநிவர் அளித்திருந்த ஒர் ஒலைச்சுருளை தந்தையிடங்கொடுத்து நாராயண நமவென்ருன். அம்மொழியைக் கேட்டு ஒலைச்சுருளைக் கண்ட வரயனுக்கு ஒர்வகை ஆயாசமுங் கோபமும் பிறந்து அடா பிரபவகாதா, நமது வம்மிஷவரிசையில் தாய் தந்தையரை தெய்வமெனக் கொண்டாடும் பால பருவத்தில் இரண்யகசிபநமாவென்று சொல்ல வேண்டி யதிருக்க ஜலத்தை நோக்கி நாராயண நமவென்று கூறுவதை யோசிக்கில் பிரபவ மேற்படி புரட்டாசி மாதம் பிற்பூரணை பிற்பகலில் பிறந்தவன் பிதாவிற்கே சத்துருவாவானென்னுங் கணிதப்படி உனது பிறவியின் காலதோஷம் தந்தையை மறந்து தண்ணிரை சிந்திக்குங் காலமாச்சு போலுமென்று துக்கித்து உங்கள் நாராயணன் எங்கிருக்கின்ருனென்ருன். அதைக்கேட்ட பிரபவகாதன் துானிலு மிருப்பான் துரும்பிலு மிருப்பானென்று பெருங் கூச்சலிட்டான். அக்கால் தூணில் மறைந்து சிம்மத்தோலை தலையிற் போர்த்திருந்த வாரிய வேஷப்பிராமணன் திடீரென வெழுந்து நிராயுதபாணியாயிருந்த வரசனை தன் கைவல்லியத் தால் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிட்டு வெளி ஒடிவிட்டான். பெரும் அரவங்கேட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் ஒடி வந்து பார்க்குங்கால் அரசன் பிரேதமாகக் கிடக்கவும் அருகிநிற்கு மைந்தன் யாதொன்றும் தோன்ருமல் திகைக்கவுங் கண்டவர்கள் அரசனைக் கொன்றவர்கள் யாரென்று