பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 5 க. அயோத்திதாளப் பண்டிதர் கண்டேன். அது யாதென்றறியேன். ஆயினும் அவனை மட்டும் எனக்குத் தெரியுமென்ருன். சமண முநிவர் மந்திரிக்குத் தெரிவித்து மந்திரியும் வேவுகர்களை விடுத்து அவனைப் பிடி ப்பதற்கு முன் ஊரைவிட்டோடிப்போய்விட்டான். அதன் பின்னர் அரசாங் கத்தவர் யாவரு மொன்றுகூடி. நூதனமாயின் விட ங் குடியேறியுள்ளக் கூட்டத்தோரை துரத்திவிடவேண்டு மென்ருலோசித்து ஆரிய வேஷப் பிராமணர்கள் யாவரையு மத்தேசத்தைவிட்டு துறத்திவிட்டார்கள். இவர்களும் ஒவ்வோர் சிறுமலைகளைக் கடந்து சிற்றுார்களை யடையவதும், அடர்ந்த காடுகளைக் கடந்து மறுதேசங்களைச் சேர்வதுமாகிய கஷ்டங்கள் அதிகமாயிருக்கினும் வஞ்சித்தும், பொய் சொல்லி யும் பொருள்பரித்து தின்றுவந்தசுகங்களானது அந்தந்த தேசங்களை விட்டகல்வதற்கு மனமிராது அங்கங்குள்ள விவேகமிகுத்தக் கூட்டத்தோர்களை அழிக்கவும் துன்பப்படுத்தவுமானச் செயலேயே முன்கொண்டு தங்களை வேஷப் பிராமணர் களென்று தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் பறைகிறவர்க ளெவர்களோ அவர்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென்று கூறவும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்து தங்கள் வேஷப் பிராமணத்தை விருத்திச்செய்து வருவதே அவர்க ளேதுவாயிருந்தது. மாளவதேசத்திற் சேர்ந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் சோகென்னும் மன்னனை யடுத்து அவனது காமியவிச்சைக் குடன் பாடாகி சகல போதனைக்குள்ளும் வயப்படுத்திக் கொண்டார்கள். அதனையுணர்ந்த சங்கத்து சமண முநிவர்களும், விவேகமிகுத்தவர்களும் அரசனையடுத்து யாதுமதி கூறினும் விளங்காது வேஷப்பிராமணர்களின் பொய்ப்போதங்களையே மெய்யென நம்பி மதோன்மத்தன யிருந்துவிட்டான். சமணமுநிவர்களைப் பாழ்படுத்துவதற்கு இதுவே நல்ல சமயமென்றுன்னி வேஷப்பிராமணர்கள் யாவரு மொன்று கூடி யாலோசித்து அரசனுடைய முத்து மாலையைக் கொண்டுபோய் அறப்பள்ளியில் வீற்றிருக்கும் சமனமுநிவர் களது வோலைச்சுருட் பேழையில் ஒளித்துவைத்துவிட்டு முத்து மாலையைத் தேடுங்கால் வேவுப்பிராமணர் அரசனை யணுகி