பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 35 பரிநிருவானமுற்ற சிறப்பும், வடகாசியில் விசேஷமுற்றிருந்த படியால் இந்திரதேசவாசிகளாம் சகல மக்களும் அவ்விடஞ் சென்று கங்கையில் மூழ்கி காசிநாதனறப் பள்ளியடைந்து சங்கஞ்சார்ந்து தவ நிலை பெறுவதும் சென்ற சிலர் அவ்விடந்தங்கி ஆனத்த விசாரினைப் புரிந்துவருவதுமாகியக் கூட்டங்களின் வரவே மிகுந்திருந்தது. இவைகள் யாவயுங் கண்ணுற்ற வேஷப்பிராமணர்கள் யாவருக்கும் ஒர்வகைப் பேராசை யுண்டாகி இத்தேசத்தரசனை நமது வயப்படுத்திக்கொண்டால் நம்மவர் ஆயிரங்குடிகள் சுகமாக வாழலாம். இதுவிசேஷ வரவுள்ளநாடாயிருக்கின்றது இங்கு சிலநாள் தங்கி அரசனது குணுகுணங்களையும் அவனது இன்பச்செயல்களையும் ஆழ்ந்தறிந்து நெறுங்கவேண்டு மென்னுங் கருத்தால் காசி வியாரத்தையும், அரண்மனையையும் சுற்றிசுற்றி தங்களது யாசக சீவனத்தை செய்துக்கொண்டு வந்தார்கள். அக்காலக் காசியம்பதியை ஆண்டுவந்த அரசனின் பெயர் காசிபச்சக்கிரவர்த்தி யெனப்படும். அவனது குளு குணங்களோவென்னில் பெண்களை தனது சகோதரிகள் போலும் புருஷர்களை சகோதிரர்கள்போலும் பாவித்து குடிகளுக்கு தன்மம் போதிப்பதையே ஒர் தொழிலாகக் கொண்டு யாவரையும் நன்மார்க்கத்தில் நடத்தி தனது செங்கோலை சிறப்பிக்கச் செய்து வந்தான். அதல்ை தேசக்குடிகள் அரசன் மீதன்பும், அரசனுக்குக் குடிகள் மீதன்பும் பொருந்தி வாழ்ந்துவந்தார்கள். அதன லிவ்வாரிய வேஷப்பிராமணர்களின் தந்திரங் களும், மித்திரபேதங்களும் செல்லாது எவ்வித வுபாயத்தேனும் அரசனைக் கொன்றுவிட்டு தேசத்திற் குடிக்கொள்ள வேண்டுமென்னு மெண்ணத்தால் காலம்பார்த்திருந்தார்கள். அக்கால் காசியச் சக்கிரவர்த்தி மைந்தனில்லாக் குறையால் மந்திரிகளையும் நிமித்தகர்களையுந் தருவித்து தனக்கு நாற்பதுவயது கடந்தும் புத்திரனில்லாக் காரணந் தெரியவில்லை அவற்றைக் கண்டாரா யவேண்டுமென்று தனது சாதக ஒலையை நீட்டின்ை. நிமித்தகர்களாகுங் காலக்கணிதர்கள் சாதகவோனை யைக் கண்ணுற்று அரசருக்கு நான்காவது சனி திசை நடப்பும், மார காதிபுத்தியும் த ப்பதால் திடுக்கிட்டு அரசனுக்கு