பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 37 அதனை யறிந்த வேஷப் பிராமணர்கள் யாசகத்திற்கு வந்துநின் ருர்கள். இவர்களைக் கண் வரசனுக்கு சந்தேகந் தோன்றி இவர்கள் யார், இவர்கள் தேசமெது நன்ருய் வுழைத்துப் பாடு பட்டு சீவிக்கக்கூடியவர்களாயிருந்தும் நாணமில்லாது பிச்சையேற்றுண்ணுங் காரணம் யாதென விசாரித்தான். அரசனது மொழியைக் கேட்ட வேஷப்பிராமணர்கள் தங்களை பிராமணர்களென்று கூறினல் அரசன் நம்ப மாட்டான் அன்னியதேசத்திலிருந்து வந்துவிட்டோம் சீவனமில்லாததால் யாசகத்திற்கு வந்தோமென்று கூறினர்கள். அவ்வகைக்கூறியும் அரசன் அவர்களது மொழியை நம்பாது இவர்கள் தான் மிலேச்சர்களாகிய சத்துருக்களாயிருக்க வேண்டுமென்றெண்ணி வேவுகர்களை யழைத்து அவர்கள் யாவரையுந் தனது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும்படி ஆக்கியாபித்துவிட்டான். - அவற்றை யுணர்ந்த வேஷப்பிராமணர்கள் யாவரும் உளரைவிட்டகன்றும் ஆசை வெழக்கமறியாது கல்வியற்றக் குடிகளிடஞ்சென்று தங்களை பிராமணர்கள் பிராமணர் களெனக் கூறி வஞ்சித்துப் பொருள் பரித்துவந்தார்கள். அக்கால் காசிபச் சக்கிரவர்த்தியும் கபாதிக்கக் கள்ள வியாதியால் மரணமடைந்தான் அதனைக் கேள்வியுற்ற வேஷபிராமணர் களுக்கு மிக்க வானந்தமுண்டாகி முன்போல் நகருள் நுழைந்து தங்கள் யாசக சீவனத்தை செய்துக்கொண்டே காங்கேயச் சக்கிரவர்த்தி தங்கள் போதனைக்கு எப்போது வயப்படுவா னென்னும் உத்தேசத்திலேயே காலங்கழித்து வந்தார்கள். தென்காசியைச் சேர்ந்து வாழ்ந்த ஆரிய வேஷ ப் பிராமணர்களும், மராஷ்டக வேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர் களும் ஒருவருக்கொருவர் கண்டு உட்சின மெழுவியபோதினும் வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் ஒருவர்வீட்டி லொருவர் புசிப்பெடுக்காமலும், ஒருவர் பெண்ணை மற்ருெருவர் கொள்ளாமலும் முறுமுறுத்துக்கொண்டே தங்கள் வேஷப் பிரா மனத்தை விருத்திச்செய்து வந்ததுடன் தாங்கள் யேற்படுத்திவரும் சிலாலயங்களிலும் வெவ்வேறு தேவர்களை சிருட்டி செய்துக்கொண்டு அதற்குத் தக்கப் பொய்ப்