பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 9 பயிற்றுவித்தபடி யால் அவரைதான் வித்தைக்கு முதலாக சிந்திக்க வேண்டுமென்று அவர்கள் தொடு க்குங் காரியா திகளுக்கெல்லாம் அவுல் கடலை தட்சணை தாம்பூலங் கொண்டுவருமேதுவைத் தேடிக் கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் திராவிட வேஷப் பிராமணர் களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்கள் யாதுகூறி பொருள் பரிக்க வாரம்பித்துக்கொண்டார்க ளென் னில் பார்வதி கருப்பந்தரிந்திக்குங்கால் சிவனுக்கு விரோதியாய வோரசுரன் கருப்பையில் காற்றுவடி வாக நுழைந்து குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டதாகவும் அதற்கு மாறுபட ஒர் யானையின் தலையை வைத்து உயிர்பித்ததாகவுங் கூறி சகலவாரம்பங்களிலும் அவ்விநாயகரை சிந்திக்க அவுல்கடலை தேங்காய் தட்சணை தாம்பூலங் கொண்டு வரவேண்டிய சீவனுதாரத்தைத் தேடிக்கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் ஆந்திர வேஷப் பிராமணர் களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்களும் விநாயகப் பெருமானின் விசேஷ மறியாதவர்களாதலின் தங்களுடைய சிவனென்னுங் கடவுள் தக்கனென்னும் அசுரனின் யாகத்தை யழிப்பதற்கு தனது முதற்பிள்ளையை அநுப்பியதாகவும், அப்பிள்ளையின் சிரம யுத்தத்தில் வெட்டுண்டு காணுதுபோனதாகவும் அவருக்குப்பின் சென்ற இரண்டாவது பிள்ளை சுப்பிரமணியர் சென்று விழுந்துகிடந்த ஒர் யானையின் சிரசைவைத்து வுயிர்பித்ததாகவுங் கூறி அதை பூசிக்கவும் தட்சணை தாம்பூலம் பெறவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். மற்றுஞ் சில கல்வியற்றக் குடி கள் கன்னட வேஷப் பிராமணர்களை யடுத்து விநாயகரை சிந்திக்கும் விஷயங் கேழ்க்குங்கால் பார்வதி நீர்விளையாடிக்கொண்டி ருக்கும்போது தன் தேகவழுக்கைத் திரட்டி ஒர் குழந்தையை வுண்டுசெய்து வாயல் காக்கும்படி செய்ததாகவும், சிவன் வந்தபோது அவருக்கு வழிவிடாதபடி யால் அக்குழந்தையை வெட்டி விட்டு வுள் நுழைந்த போது பார்வதிக்குத் தெரிந்து துக்கித்ததாகவும் சிவன் வெளிவந்து சிறுவன் சிரசைத் தேடியுங் காணுததால் அங்குள்ள ஒர் யானையின் சிரசைக் கொய்து அப்பிள்ளையின்