பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் உடலிற் சேர்த்து உயிர்ப்பித்ததாகவும் அப்பிள்ளையே விநாயகரென்றும், அதையே சகல வித்தையாரம் பங்களிலும் தொழவேண்டுமென்றுங்கூறி பொருள் பரிக்கும் வழியைத் தேடி அக்கற்பனைகளை ஒலைச்சுருட்களிலுமெழுதி மெய்க்கதைக ளென்று ரூ பிக்கும் புராணங்களையும் வரைந்துக்கொண்டார்கள். விநாயகரை சிந்திப்பதற்கு யானையின் முகத்தையே ஒவ்வோராதரவாகக்கொண்டு கற்பகைதைகளுண்டுசெய்துக் கொண்டக் காரணங்கள் யாதென்பீரேல், மகதநாட்டுச் சக்கிரவர்த்தி யென விளங்கிய மண்முகவாகின் மனைவி கருப்பமடைவதற்குமுன்பு தனது சொர்ப்பனத்தில் சுயம்பிரகாசமாய் ஒர் வெள்ளையானையின் குட்டி வயிற்றுள் நுழைந்ததுபோற் கண்டு விழித்தவுடன் பத்தாவை யணுகி தனது சொர்ப்பனத்தில் கண்ட விஷயங்களை வெளியிட்டவுடன் மண்முகவாகு அசித்த சாக்கையரென்னும் பெரியோனை வரவழைத்து சொர்ப்பனத்தை வெளியிட்டான். அசித்த சாக்கையரும் சற்ருலோசித்து உமக்கு யானையினுறத்தைப்போன்ற ஒர் ஆண்குழந்தை பிறக்கும் அதற்குள்ள சுத்த ஞானத்தாலும், சுத்த போதத்தாலும் சுத்தச் செயலிலுைம் உம்மெய்க் காண்போர் சுத்தயிதயனென்றும், சுத்தயிதயன்பெற்ற சுப் பிரதீபனென்றுங் கொண்டாடு வார்களென்று கூறிப்போய்விட்டார். அதன்பின் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் பிறந்து வளர்ந்து சுத்தஞானமுற்று சுயக்கியான போதகராயபோது தன்னை சுராபான மயக்கத்தால் உபத்திரவஞ்செய்த ஒர் யானையை உபத்திரவமில்லாமல் ஒருகரத்தா லேந்தி யெறிந்தவற்றைக் கண்ணுரக் கண்டோர் யானையுறத்தோன் யானையுறத் தோனெனக் கொண்டாடி வந்தவற்றிற்குப் பகரமாக திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிய சிலாலயத்துள் அறுபீடங்களை வகுத்து முதற்பீடமே விக்கின பீடமென்று கூறி கோசத்தையும் பீஜத்தையுமடித்து பீடத்தில்வைத்து சிந்தித்தவற்றுள் யானையின் துதிக்கைபோலும், முகம்போலும் பிரிந்திருந்தபடி யால் யானைமுக விக்கினவிநாயகனெனக் கொண்டாடிவந்தார்கள். அதை ய நுசரித்தே கற்பன கதைகளை யுண்டு செய்த