பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.38 க. அயோத்திதாஸப் பண்டி தர் மறுமெயிற் ருெடருமென்பது முன்னேர்கள் போதமாயிருக்க இக்கற்சிலைகளைத் தொழலால் பிணிநீங்குமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் சம்பத்துண்டாமென்றும் இக்கற் சிலைகளைத் தொழலால் புத்திர பாக்கிய முண்டாமென்றும் இக்கற்சிலைகளைத் தொழலால் முத்திபேருண்டாமென்றுங் கூறுவதும் அவ்வகைக்கூறியே பொருள் பரிப்பது மாயச் செயல்களையும் போதகங்களையும் நோக்குங்கால் அச்செயல்கள் யாவும் தங்களுக்காய சுயப் பிரயோசனச் செயல்களாகக் காணப்படுகிறதன்றி எங்களுக்காயப் பிரயோசனம் ஒன்றையும் காணுேமேயென்று கேட்கவாரம்பித்துக்கொண்டார்கள். அக்கேள்விகளை யுணர்ந்த வேஷப்பிராம்மணர்கள் சற்று நிதானித்து பகவனம் புத்தபிரானல் போதித்துள்ள தன்மங்களில் உங்களுக்குள்ள துற்கன் மங்கள் நற்கன் மங்கள் யாவையும் நன்காராய்ந்து உங்களுக்குள் நீங்களே துற்கன்மங்களை யகற்றி நற்கன்மங்களை பெருக்கி உங்களுக்குள்ள உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அத்தகைய வுண்மெய் யுணர்ச்சியில் உங்களுக் குள்ள இராகத் துவேஷ மோகங்களை நீங்களே யகற்றி உங்களுக்குள்ள பேரின்ப சுகத்தை நீங்களே யதுபவிப்பீர் களென்னும் வாக்கியத்தைக்கொண்டு தன்மபாத மென்னும் இருசிரடி பெளத்த போதங்களையே வோராதாரமாகக் கொண்டும் புத்தரது பெயரையே பீடமாகக் கொண்டும் பகவத்கீதை யென்னும் ஒர் நூலே வரையவாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது, பன்னிராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா வினேதனும், அர்ச்சுனனுக்கு சுபுத்திரை, பவழவல்லி, அல்லி யரசானி முதலிய ஸ்திரீகளைக்கூட்டி வைத்தவரு மாகிய பாரத கதா புருஷன் கிருஷ்ணனுக்கு புத்தருக்குரிய பகவனென்னும் பெயரைக்கொடுத்து அப்பகவற்ைபோதித்த பகவத்கீதையென வகுத்து பூர்வ சத்தியதன்மத்தில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் தன்னை போவிக்கவேண்டும் தன்னை யாராயவேண்டும், தன்னை சிந்திக்கவேண்டு மென்னுந் தன் மங்களை என் 2ன போவிக்கவேண்டும், என்னை யாராயவேண்டும், என் 2ன சிந்திக்கவேண்டுமெனக் கிருஷ்ணன் கூறியதுபோல் ஆரம்பித்து சிலைகளைத் தொழுது முத்தி பேறுபெற விருப்பற்