பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 1.37 இத்தகைய துன்மார்க்கர்கள் பரவி சன்மார்க்க சங்கங்களும் நிலைகுலைந்ததன்றி அறப் பள்ளிகளில் சிறுவர்களுக்குப் போதித்துவந்த கல்விசாலைகளு மழிந்து கைத்தொழில்விருத்தியுமொழிந்து நூதனசாதிபேதச் செயல் களால் ஒற்றுமெக்கேடே மிகுந்து சமயபோராட்டத்தால் சாமிசண்டைகளே மலிந்துவருங்கால் மகமதிய துரைத்தனம் வந்து தொன்றிவிட்டது. இந்திரர்தேய வடபாகத்தில் வந்து குடி யேறிய மகமதிய வரசர்களுக்குள்ளும், புருசிகதேச வேஷப்பிராமணர்களே பிரவேசித்து அவர்களுக்கு வேண யேவல்புரிந்தும் இத்தேசத் தின் போக்குவருத்துகளை யுரைத்தும் தங்களுக்குரிய சிற்றரசர் களே நேசிக்கச்செய்தும் தங்களுக்கு யெதிரிகளாயுள்ள பெளத்தவரசர்களையும் விவேகமிகுத்தக் குடிகளையும் பெருஞ் சங்கங்களாயிருந்த சமண முனிவர்களின் கூட்டங்களையும் அழிக்கத்தக்க யேதுக்களைத் தேடி விட்டார்கள். அதாவது சமணமுனிவர்களின் கூட்டத்தோர்கள் யாவரும் ஒரே மஞ்சள் வருண ஆடைகளைக் கட்டிக்கொண்டு சிர மொட்டையாயிருந்தபடி யால் மகமதியர்களுக்கு யீதோர் படைவகுப்பென்று கூறி அவர்களுக்குக் கோபத்தை மூட்டி வைத்துக் கொல்லும் வழியைச் செய்து அந்தந்த வரப்பள்ளி களில் தாங்கள் நுழைந்து சிலைகளையே தெய்வமெனத் தொழுவழியாம் மதக்கடைகளைப் பரப்பிப் பொருள் பரித்து சீவிக்கும் வழிகளை யுண்டு செய்து வருங்கால் சண்டாளர் களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும், தாழ்த்தப் பட்டுள்ள விவேக மிகுத்த மேன் மக்கள் யாவரும் முயன்று கல்லுகளையும் கட்டைகளையும் தெய்வமென்று தொழுவது அஞ்ஞானமென்றும் அத்தகையத் தொழிகையால் கல்லைத் தொழுஉங் கர்ம்மமே கனகன்மமாக முடியுமென்றும் அதல்ை கல்வியின் விருத்தியும் கைத்தொழில் விருத்தியுங் குன்றிப் போமென்றும் இம்மையில் ஒருக்கல்லேவைத்துப் பூசித்து சீர்கெடுவோன் மறுமெயில் பத்துக்கல்லைவைத்துப் பதமழிவா னென்றும் போதித்து வருவனவற்லைக் கேட்டுணர்ந்த சில விவேகிகள் வேஷப்பிராமணர்களை யடுத்து எக்கருமத்தை யிம்மெயிற் செய்துவிடுகின் ருனே அக்கருமமே யவனே