பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 45 சங்கதிகளும் புத்ததன்மத்தைச்சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை யென்றுங் கிடையாது. அவ்வேதத்துள் புத்ததன் ம சரித்திரங்களிலுள்ள பெயர்களும் ஞானங்களுமடங்கியிருந்த போதினும் அதனதன் பொருட்களையும் செயல்களையுமுனராமலே வரைந்துவைத்து விட்டார்கள். இவ்வேதத்துக் குரியவர்கள் யித்தேசத்தவர்களாயிராது அன்னியதேசத்தினின்று யிவவிடம்வந்து குடியேறி தங்கடங்கள் சுயப்பிரயோசனத்திற்காய்ப் புத்ததன்ம அறஹத்துக்களைப்போல் பிராமணவேஷ மணிந்துக் கல்வியற்றக் குடிகளை வஞ்சித்து வந்தபோதினும் புத்ததன்மத்தைச் சார்ந்த சிரமணர்கள் செயல்யாது, பிராமணர்கள் செயல் யாது, சிரமணர்கள் மகத்துவமென்னை, பிராமணர்கள் மகத்துவமென்னையென் றுணராமலே வேஷத்தைப் பெருக்கி பொருள் சேகரிக்கும் நோக்கத்திலேயே யிருந்தார்கள். சமணமுநிவர்களுக்குள் உபநயனமென்பது ஞானக்கண் உள்விழி திறத்தலென்னுங் குறிப்பிட்டு ஞானத்தானம் பெற்ருேன் ஞானக்கண் பெற்ற வனென்னு மடையாளத்திற்காக மதாணிப்பூணு நூலென்னும் முப்பிரிநூலை மார்பிலனிந்துவந்தார்கள். இவ்வேதத்திர்குரிய வேஷப் பிராமணர்களோ வதனந்தரார்த்த மறியாது என் பெரியபிள்ளைக்கு உபநயனஞ்செய்ய போகின் றேன் பொருள் வேண்டும், சிறிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப் போகின்றேன் பொருள் வேண்டுமென்னும் சுயப்பிரயோச னத்தையே நாடி நின்ருர்கள். சமணமுநிவர்கள் புத்ததன்ம சங்கமென்னும் மும்மணிகளை மைேவாக்கு காயமென்னும் மும்மெயில்வணங்கி அவற்றை திரிகாய மந்திரமென்றும், காயத்திரி மந்திரமென்றும், வழங்கிவந்தார்கள். அதனந்தரார்த்தந்தெரியா திவ்வேஷப் பிராமணர்கள் விசேஷமான காயத்திரிமந்திரஞ் செய்யப் போகின் ருேம் காயத்திரி மந்திரஞ்செய்யப் போகின்ருே மென்னும் இரண்டொரு வடமொழி சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே பொருள் சம்பாதிக்கும் மேதுவில் நின்றுவிட்டார்கள். அறஹத்துக்கள் சமணமுநிவர்களாகியத் தங்கள் மாணுக்கர்களை சாலக்கிரமம் சாலக்கிரமமென