பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 +6 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் வாசீரளிப்பது கண்டு அதனந்தரார்த்த மறியா இவ்வேஷப் பிராமணர்கள் சமுத்திர வோரங்களில் உருண்டு கிடக்கும் சிறியக் கூழாங்கற்களில் சிவப்பு நிறக்கோடுகளுள்ளதை யெடுத்துவந்து கல்வியற்றக் குடிகளிடம் இதுதான் சாலக்கிராமம் இதைப் பூசிப்பவர்கள் மேலானபாக்கியம் பெருவார்களென வஞ்சித்து அதலுைம் பொருள் சம்பாதித்துவந்தார்கள். இவைபோன்றே சமணமு நிவர்களுள் பேதமென்னு மொழியை வேதமென வழங்கிவந்ததும், திரிபேத வாக்கிய மென்னுமொழியை மூன்றுவகையான மொழியென்பதையும் வரிவடி வட்சரமில்லாத காலத்தில் இவ்வருமொழி மூன்றினையும் ஒருவரோதவும் மற்ருெருவர் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்த படி யால் திரிசுருதிவாக்கியங்களென்றும், மும்மொழியும் பொருள்மயங்கினின்ற படியால் மும்மறை மொழிகளென்றும் வழங்கிவந்ததுடன் அதன் சாதன சித்தியால் வீடுபேறு கண்டவுடன் வீடுபேறென்னு மொழியையும் ஒர் வாக்கியமாக்கி சதுர்பேதவாக்கியமென்றும், நான்கு சுருதி வாக்கியமென்றும், நான்கு மறைபொருளென்றும் வழங்கி வந்தரகசியார்த்தத்தை இவ்வேஷப்பிராமணர்க ளறியாதும், பேதமொழிகளென்பதே வேதவாக்கியங்களென வழங்கி வருவனவற்றை நான்கு பேதமொழிகளென்றும், நான்கு வகையாய் வாக்கியங்க ளென்றும் உணராது பெரியபெரியக்கட்டு புத்தகமென்றெண் னியும் இப்பேதமொழிகள் மூன்றும் வரிவடிவட்சரமில்லாத காலத்தில் புத்தபிரானல் ஒதவும் மற்றவர்கள் தங்கடங்கட் செவிகளாற் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்ததுகொண்டு வரையாக் கேள்வி யென்றும் திரிசுருதி வாக்கியங்க ளென்றும் சொல்லவுங் கேட்கவுமாயிருந்த மொழிகளை உணராது பத்தாயிரஞ் சுலோகம், பன்னிராயிரஞ் சுலோகம், எட்டு புத்தகம் பத்து புத்தகமென வரைந்துள்ள கதைகள் யாவையும் ஒருவன் மனதிற் பதியவைத்துக் கொண்டு மற்றவனுக்கு போதிக்கவும், மற்றவனவற்றை தனது செவிகளாற் கேட்டு சிந்தனையில் வைக்கவுங் கூடுமோ வென்றறியாதும் பெரியக் கட்டு புத்தகத்தை சுருதியென்றுங்கூறி தங்களறியாமெயால் மற்றவர்களையு மயக்கி ஜோராஸ்டிரரால் வரைந்துள்ள ஜின்ட்டவஸ்த்தாவிலிருந்த சரித்திரங்களிற் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும் புத்ததன்மங்களிலிருந்த சரித்திரங்களிலும்,