பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I -19 மற்றவர் செவிகளிற் கேழ்க்கவுமா யிருந்ததுகொண்டு திரி சுருதிவாக்கியங்களென்றும் வரையாக் கேள்விகளென்றும், வழங்கி வந்தார்கள். அதன்பின்னர் புத்தபிரான் பாலியாம் மகடபவுை யையே மூலமாகக்கொண்டு, சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாந் தென்மொழியையும் வரிவடி வாட்சரங்களாக யேற்படுத்தியபோதும் சுருதிகளா யிருந்த பேதவாக்கியங்களை செவியாற் கேட்கவும், மனதாற சிந்திக்கவும், அறிவாறத்தெளிவு முண்டாகி சாந்த ரூ பிகளாய் பிறப்புப் பிணி மூப்புச்சாக்காடை ஜெயித்த அறஹத்துக்களின் சரித்திரங்களையும் அவரவர்கள் சாதனங்களையும் ஆசியர் போதனங்களையும் விளக்கி ஒர் சரித்திரம் எழுதியுள்ள நூற்களுக்கு இஸ்மிருதிக ளென்றும் வகுத்திருந்தார்கள். இவற்றுள் அன்ன மீவது வோர் தன்மமும், ஆடையீவ தோர் தன்மமுமாயிருப்பினும் மக்களுக்கு நீதியையும் நெறியையு மோதி துன்மார்க்கங்களை யொழித்து நன்மார்க்கங்களில் நடக்கும் போதனைகளை யூட்டி துக்க நிவர்த்திச் செய்து சுகம்பெறச் செய்யுந்தன்மம் மேலாய தன்மமாயிருக்கின்றபடி யால் அத்தகைய போதனைகளைப் போதிப்பவர் பெயரையும் அவற்றைக்கேட்டு நடப்பவர் பெயரையுங் கண்டு தெளிவுற யெழுதியுள்ள நூலுக்கு இஸ்மிருதியென்றும் தன் மநூலென்று மெழுதியிருந்தார்கள். அதாவது, வாசிட்டம், பிரகற்பதி, கார்த்திகேயம், திசாகரம், மங்குலியம், மனு, அத்திரி, விண்டு, இயமம், ஆபத்தம்பம், இரேவிதம், சுர2லவம், கோசமம், பராசரம், வியாசரம், துவத்தராங்கம், சுரலைவம், கவுத்துவம், கிராவம் என்பவைக ளேயாம். இவைகளுள் வசிட்டரென்னும் மகாஞானி இராம னென்னு மரசனுக்கு புத்தரதுவாய்மெகளையும் அவரது சாதனங்களையும் மற்றும் பரிநிருவான முற்ற அரசர்களின் சரித்திரங்களையும் அவர்களது சாதனங்களையும் விளக்கிக் கூறியுள்ள நூலுக்கு வசிட்ட ஸ்மிருதியென்றும், வசிட்ட தன்ம நூலென்றுங் கூறப்படும். பிரகற்பதி யென்னும் மகாஞானி சந்திரவாணனென்னு மரயனுக்குப் போதித்த நீதிநெறி யொழுக்கங்களையும் ஞான சாதனங்களையும் வரைந்துள்ள நூலுக்கு பிரகற்பதி ஸ்மிருதியென்றும், பிரகற்பதி தன் ம