பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ꮾ 0 க. அயோத்திதாஸப் பண்டிதர் மடைவதையறிந்த கருணைநிறைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத் தார் பஞ்சமர்களென்றேனும் அவர்கள் பெயரை மாற்றி விடலாமென்று பள்ளிக்கூடங்களெங்கணு மாற்றிவிட்டார்கள். அதையறிந்த சாதி பேத வஞ்சகர்கள் வீதிகளிலடித்துள்ள முநிசபில் போர்டுகள் யாவற்றிலும் முன்பவற்றிலில்லாத பறைச்சேரி வீதி பறைச்சேரி வீதியெனப் பலகைகளில் வரைந்து அப்பெயர் மாருதிருக்கும் வழியைச் செய்திருக்கின்ருர்கள். பறையர்களென்னும் பெயரை அதிற்பறவச்செய்ததும் போதாது டீப்பிரஸ்கிளாசை சீர்திருத்தப் போகின்ருே மென்னும் படா டம்பமடித்துக் கூட்டங்கூடுவதில் டிப்பிரஸ் கிளாஸ்யாரென்ருல் பறையர்களென் போரும் சக்கிலிகளு மென்று குறிப்பிட்டிருக்கிருர்கள். இத்தியாதி பொருமெச் செயல்கள் யாவும் பெளத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்க விடாமற் செய்த வஞ்சினக்கூற்ருதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ்விந்திரர் தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம். அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர் களையும், அவரவர்கள் ஆண்டு வந்த தேசங்களையும் குறிப்பிட்டிருக்கின்ருர்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங் குறைந்து சாதிபேத மதபேதத்தால் வஞ்சினம் பொருமெ நிறைந்து நாளுக்குநாள் தேசம் பாழடைந்து வருவதற்குக் காரணமாய சரித்திரம் யேதுண்டோ அவைகளை மட்டிலு மிவ்விடம் வரைந்துள்ளோம். வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த மேன்மக்கள் கீழ்மக்களாகத் தாழ்ந்த குறைவே இந்திரர் தேசத்தின் சிறப்புங் குன்றி சீர்கெடுவதற் கேதுவாகிவிட்டது. யதார்த்தத்தில் தேசத்தையும் தேசமக்களையும் சீர்திருத்த முயலுங் கருணைதங்கிய பெரியோர்கள் இச்சரித்திரத் தையும் ஆய்ந்து சீர்திருத்தும்படி வேண்டுகிருேம். முற்றிற்று.