பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு கருமத்தலைவரென்றும்; விவேகமிகுத்தோர்க்குப் பெயர் விவேகி, அறிஞர், சான்ருேர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலக மேதாவியரென்றும்; அவிவேகி களாம் அறிவில்லார்க்குப் பெயர் பொறியிலார், கயவர், நீசர், புள்ளுவர், புல்லர், தீயோர், சிறிய சிந்தையர், கனிட்டர், தீக்குனர், தீம்பர், தேருர், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவரென்றும்; இவ்வகையாய் பஞ்ச பூமிகளின் விளைபேதத்திற்கும், பொருள்பேதத்திற்குந் தக்கப் பெயர்களையும், மனுக்களின் குனபேதங்களுக்கும், தொழில் பேதங்களுக்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்து புத்ததன்மத்தில் நிலைத்து ஒற்றுமெயுற்ற சுகவாழ்க்கையில் நிலைக்கச் செய்தார்கள். வட யிந்திய மென்னும் ஆசியா மத்திய கண்டமுதல் தென்னிந்திய கடைகோடி வரை எங்கும் புத்த சங்கங்களையே நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து புத்த தன்ம அரசர்கள் யாவரையும் நீதிவழுவா நெறியிலும் அன்பின் மிகுத்தச் செயலிலும் நிலைத்து ஒரரசருடன் மற்ருேர் அரசன் வீணே முனைந்து தீராப்பகையை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர்க் கொருவர் சமாதானமும் சாந்தமும் நிலைக்கும்படி யாக அவரவர்கள் அரண்மனை முகப்பில் வெள்ளைக்கொடியும், பிடிப்பது வெள்ளைக்குடையும், ஏறுவது வெள்ளைக்குதிரையும், வெள்ளே யானையும், அணிவது வெண் பிறைமுடியும், வெள்ளையங்கியும், வீசுவது வெண்சாமரையுமாக வகுத்து எக்காலும் ஆனந்தச்செயலில் வீற்றிருக்கச் செய்தது மன்றி புத்ததன் மத்தைச் சாராத வரசர்கள் எதிர்ப்பார்களாயின் அவர்களுடனும் விணே யெதிர்த்துப் போர்புரியாமல் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்தைக்கையாடி அரசுபுரியும் வழிகளையும் வகுத்துவைத்தார்கள். இத்தகைய புத்ததன்ம வரசர்களுக்குள் விம்பாசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன், நந்தன் முதலிய வரசர்கள் தங்கடங்க ளரசை நீதி நெறியில் நடத்தியது மன்றி சத்திய தன்மங்களையும் பரவச் செய்து வந்தார்கள். சித்தார்த்தி சக்ரவர்த்தியாம் புத்தபிரானுக்கு முன்பு மண்முகவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, கலிவாகென்னும் நவச்சக்கிர வர்த்திகள் கபிலை நகருக்கும், மகத நாட்டிற்கும்