பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 39 ஒரே வகையி லிருக்கவேண்டுமென்று போதித்து ஒவ்வோர் சங்கத்தினர்கள் படித்தர சாங்கியத்தையும் ஒரே வழியில் நடாத்தும்படியாகப் போதித்தக் காலக்குறிப்பு மாருது கபில முநிவரது சாங்கிய சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். அங்கபாத முநிவர் காலக்குறிப்பைக் காட்டு ம் நொய்யாயிகம் அல்லது நையாயிக சமயமாவது யாதெனில்: நொய்யாம் அணுத்திரளாயிருந்த காலத்தாலும் இகமாம் பூமி யழிந்ததில்லையாகும். அணுத்திரள் யாவுந் திரண்டு அண்டம் போன்ற பூமியாகி அழியாதிருக்கின்றதென்பதும் அவ்வழியா நிலைகண்டு பூமிக்கு நிலமென்னும் பெயரளித்துள் ளதும் ஆகிய இகத்தில் வாழ்வோர்களாகிய நாமும் நையாது நித்தியநிலைப் பெறுதற்காக யில்லந் துறப்பதே சிறப்பென்று கூறி இகத்தில் நையாயிதத்தை விளக்கியது கண்டு அங்கபாத முநிவர் காலக்குறிப்பு மாருது நையாயிக சமயமென்று கொண்டாடி வந்தார்கள். கணுத முநிவர் காலத்தில் தோன்றிய வை சேஷக சமயமாவது யாதெனில், 'கணுதமுநிவர் கருணைகூர்ந்து சகலருக்கும் சங்க அறன் சத்தியபோதத்தை விளக்கிவருங்கால் இல்லறதன்மமும், துறவற தன்மமும் வையகத்தில் விசேஷமுற்றிருப்பினும் பொதுவாக சேவித்துள்ளது சத்தியதன்மமேயாதலின் உலகமாக்கள் ஒவ்வொருவரும் வையகத்திற் கெடாது சேவித்துள்ள சத்தியதன் மத்தில் நடந்து சதானந்தத்தைப் பெற வேண்டுமென்று கூறிவந்த கணுதமுநிவரின் காலக் குறிப்பு மாருது வைசேடிக சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். சைமினி முநிவர் காலத்தில் தோன்றிய மீமாம்ஸ் சமயமாவது யாதெனில்: சைமினிமுனிவர் உலக மக்கள் மீது கருணைகூர்ந்து சத்திய தன்மத்தை விளக்கி வருங்கால் சிறந்த பிறப்பும், சிறந்த ஞானமும், சிறந்த வன்பும், சிறந்த சாந்தமும், சிறந்த செயலும், சிறந்த வுருவும், சிறந்த வாக்கும், சிறந்த போதனையு மமர்ந்த மகா அம்ஸ் வுருவாம் புத்தபிரானுக்கு மீ, மேற்பட்டவர்கள் உலகத்தில்