பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. அயோத்திதாஸப் பண்டிதர் ஒருவருமில்லையாதலின் அவரது சத்தியதன்ம போதத்தில் ஒன்றைக் கூட்டவாவது குறைக்க வாவது கூடாதென்று அறவாழியான் மீ, மகா அம்சத்தை விளக்கிய சைமினி முநிவர் காலக்குறிப்பு மாருது பகவன் மீமாம்ஸ் சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். இத்தகைய ஆறு சமண மு நிவர்களால் அறுவகை சமயபேதங்களுண்டாயினும் அறு சமயங்களுக்கும் ஆதார தன்மகாயமாம் புத்தரும், அவரது தனமமும், அவரது சங்க முமட்டும் பேதப்படாது அறுசமயத்தோர்க்கும் உபாசகர்கள் உண்டியளித்து வுதவிபுரிந்து வந்தார்கள். இவ்வாறு சமய விவரங்களை அருங்கலைச்செப்பு அறு சமயப்பத்திலும், பெருந்திரட்டிலும் தெளிவாகக்காணலாம். இத்தகைய பெளத்த சங்கத்தோர்களாலும், பெளத்ததன்ம அரசர்களாலும், மற்றும் உபாசகர்களாலும் சீவராசிகளின் விருத்திகளையும், மதுமக்களின் சுகங்களையும் மேலாகக் கருதி சிறுபிள்ளைகளின் கல்வி விருத்திக்கு அறப் பள்ளிகளில் கூடங்களையும், பிணியாளர்களை சுகப்படுத்துவதற்கு வைத்திய சாலைகளையும், ஒரு சங்கத்தைவிட்டு மறு சங்கத்திற்குச் செல்லும் சமணமுநிவர்களுக்கும், சகல யேழைகளுக்கும் அன்னதன்ம சாலைகளையும், திக்கற்ற வைைத குழந்தைகளுக்கு அமுத தன்ம சாலைகளையும் வகுத்து ஒருவருக்கு வோராபத்து நேருங்கால் மற்றவர்கள் கூடி அவ்வாபத்தை நீக்குதலும், ஒருவருக்கோர் துன்பமுண்டாயின் மற்றவர்கள் கூடி அத்துன்பத்தை நீக்குதலுமாகியச் செயலால் சகல பாஷை மக்களும் பாஷை பேதமாயினும் தன் மத்தில் பேதமின்றி தன்னைப்போல் பிறரையும் நேசித்து ஒற்றுமெய் மிகுதியாலும், அன்பின் பெருக்கத்தாலும், திராவிட ராஜன் மகளை சிங்கள ராஜன் விவாகம் புரிவதும், சிங்களராஜன் மகளை வங்காளராஜன் விவாகம் புரிவதும், வங்காளராஜன் மகளை மராஷ்டகராஜன் விவாகம் புரிவதுமாகிய வொற்றுமெய் நயத்தைக் காணுங் குடிகளும் அரசர்களெல்வழியோ குடி களு மவ்வழியெனக் கொண்டாடு தேச சிறப்பும், குடிகளின் சிறப்பும், கல்வியில் இலக்கிய நூற்களின் சிறப்பும், இலக்கண நூற்களின் சிறப்பும், கலை நூற்களின் சிறப்பும், வைத்திய நூற்களின் சிறப்பும்,