பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 4.3 சுட்டச் சாம்பல்களை வாறி பேதை மக்கள் கைகளில் கொடுத்துவிட்டு அவரவர்களிருப்பிடஞ் செல்லுங்கால் கல்வியற்ற குடிகள் அவுற்பிரசாதங் கேட்பார்களாயின் அவுற் பிரசாதம் தேவர்களுக்கே யன்றி ஏனையோருக்குக் கொடுக்கப்படாதென்று கூறி தங்கள் சுகத்தைப் பார்த்துக் கொள்ளுவதில் பிரியமான மாமிஷங்களைச் சுட்டுத்தின்பதற்காக யாகமென்னு மொழியே ஏழாவ தேதுவாகிவிட்டது. அவுற் பிரசாதத்தைக் கேட்ட குடிகள் யேதுங் கிடையாது கைநிறம்ப மாமிஷஞ் சுட்டச் சாம்பலைப்பெற்றேகுவதையே ஒர் பலனெனக் கருதி பலவகையாலும் விசாரனை யற்றுப் பாழடைந்தார்கள். கோவிலென்பதின் விவரம், கோ-இல் கோவில் என்பது அரசன் வாழ் மனையின் பெயர். அதாவது சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் கோவிந்தமென்னும் துறவு பூண்டதும் துறவினது விந்தையால் அரசன் விந்தமென்னும் மலையில் வீற்றிருக்க கோவிந்தம் கோவிந்தமென்றும் அழைக்கப் பெற்ற மொழிகள் யாவும் அரசனே துறவுபூண்டு பெற்ற நான்கு வாய்மெயின் மகத்துவமே பேரானந்த நித்திய சுகத்தி லிருத்தியதை காட்சியாய் கண்டவர்களும், அநுபவத்திலுணர்ந்த வர்களும் மகத நாட்டில் சித்தார்த்தி சிறுவருக்கமைத்திருந்த இராஜகிரகத்தை தெரிசிக்கப்போவோர் யாவரும் கோவில் கோவிலென வழங்கிய வாதாரங்கொண்டு சித்தார்த்தர் புத்தநிலை யடைந்து அவர் பரிநிருவான மடைந்த பின்னரும் அவரைப்போன்ற வுருவங்களை ஸ்தாபித்துள்ள வியாரங்கள் யாவற்றையும் கோவிலென வழங்கிவந்த மொழி மாருது நாளதுவரையில் வழங்கி வருகின்ருர்கள். சித்தார்த்தி அரசரது மனையை அவர் மற்ற மக்களுடன் உலாவிக்கொண் டிருக்குங்காலும் கோவிலென வழங்கியவர் கள் அவர் பேரானந்தமாம் பரிநிருவாணமுற்றும் அவரைப் போன்ற வுருக்க ளமைத்துள்ள வியாரங்களையும் கோவி லென்றே யழைத்து வந்ததுடன் பெளத்த காவியங்களிலும் நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு, கோவிற் சிறப்பென்றும், நாட்டு வருணனை, நகர வருனனை, கோவில் வருனனையென்றும் பாயிரங்களுள் விளக்கியிருக்கின்ருர்கள்.