பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 45 இத்தகையக் கோவில்களென்னும் வியாரங்கள் கட்டி யுள்ள விஷயங்களும் அவ்வியாரங்களில் அரசர் உருவங்களே அமைத்துள்ள விவரங்களும் அதனுள் சமன முநிவர்களை சேர்த்து வேண வுதவி புரிந்துவரும் விவரங்களும் கல்வியற்றப் பெருங் குடிகளுக்கும் வேஷப்பிராமணர்களுக்கும் விளங்காதிருந்தபோதினும் புத்தபிரானுக்குரிய ஞானசாதன செயலுக்குத் தக்கவாரளித்துள்ள ஆயிர நாமங்களில் ஒவ்வொன்றை தாங்களு மெடுத்துக்கொண்டு அப்பெயரால் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிக்கொண்டு அப்பெயர்களுள்ள சிலைகளையும் அதனுள்ளமைத்து அப்பெயர்களையும் அதன் செயல்களையும் கிலதையொட்டியப் பொய்க்கதைகளையும் அதினந்தரார்த்த மறியாமலே வரைந்து வைத்துக்கொண்டு வியாபாரக் கடைகளைப்போல் கோவில்களினுள் வேஷப் பிராமண மதக்கடைகளைப் பரப்பி சீவிப்பதற்கு யெட்டாவ தேதுவாகிவிட்டது. பெளத்த தன்மங்களை யெங்கும் பரவச்செய்துவரும் திராவிடர்களில் விவேகமிகுத்தோர் மிலேச்சர்களாம் ஆரியர்களின் பொய் வேஷங்களையும், நாணமற்ற ஒழுக்கங் களையும், பல சீவன்களே நெருப்பிலிட்டு சுட்டுத்தின்னுங் காருண்யமற்ற செயல்களையுங் கண்டு மனஞ்சகியாது மிலேச்சக் கூட்டங்களை காணு மிடங்களிலெல்லாம் அடித்துத்துரத்தி இவர்களது வஞ்சகக் கூற்றையும் பொய் வேஷங்களையுங் குடி களுக்கு விளங்க பறைந்து வருவதுடன் தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளுக்குள் வருவார்களாயின் தங்கடங்கள் சீலங்களும், நல்லொழுக்கங்களுங் கெட்டு ப்போமென்று வீதிக்குள் நுழைந்தவுடன் அடித்துத்துரத்தி சாணத்தைக் கரைத்து அவர்கள் வந்த வழியில் தெளித்துக்கொண்டுபோய் சாணச் சட்டியையும் அவர்கள் மீதி லுடைத்து வருவது வழக்க மாயிருந்தது. சுரணையற்ற சீவனமும், நாணமற்ற குணமும், ஒழுக்கமற்ற செயல்களு முள்ளதுடன் கருணையற்றச் செயலால் பசுக்களையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு அதன் புலாலைத் தின்று மதுவென்னும் சுராபானத்தை யருந்துங் கூட்டத்தோரின் நீச்சச்செயல்களை நாளுக்குநாள் கண்டு வந்த, திராவிட