பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் தொகுதி நான்கு 5.3 பிராமணர்க்கு விளங்கா திருப்பினும் வேஷப்பிராமணர்களால் ஒற்றுமெய்க்கெட்டு பிரிவினைகளுண்டாய கேடுகள் போதாது தொழில்களுக்கென்று சமனமு நிவர்களால் வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை சகல சாதிகளுக்கும் மேலாய உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு தங்களது பொய்ப் போதகங் களுக்கும், மாறு வேஷங்களுக்கு முட்படாது பராயர்களாக விலகி இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்க் குரு போதங்களையும் குடிகளுக்குப் பறைந்து வந்த விவேகமிகுந்த மேன்மக்களாம் பெளத்த வுபாசகர்களை சகல சாதிகளுக்கும் தாழ்ந்த சாதி பராயரென்றும் பறையரென்றுங் கூறி பலவகையாலுங் கெடுக்கத்தக்க யேதுக்களைச் செய்துக் கொண்டார்கள். ஒவ்வொருவர் தொழில்களையும் நீதி வழுவாமல் நடத்துவதற்கு புத்தபிரானம் பிரம்மனின் உருவையே பீடமாக்கி அவரது முகத்திலும், புஜத்தினும், துடையிலும், பாதத்திலும் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில் களையும் நீதிவழுவா சிறப்புடன் நடத்துவதற்கும், குடிகள் சுகம்பெற்ற வாழ்க்கை யடைவதற்கும் வகுத்திருந்த தொழிற் பெயர்களை வேஷப்பிராமணர்கள் தங்களது சுயப் பிரயோ சனத்தைக் கருதி தங்கள் வேஷத்தை சிறப்பித்து அதிகாரப் பிச்சை யேற் றுண்பதற்காகக் கல்வியற்றக் குடிகளிடம் நீதி வழிகளில் நடப்பதற்காக வகுத்திருந்தத் தொழிற்பெயரை அநீதவழியாம் சாதிப்பெயரென மாற்றி அதிற்ருங்கள் பிரம்மாவின் முகத்திற் பிறந்த உயர்ந்த சாதியென்று வகுத்துக்கொண்டு பிள்ளை பெண்டுகளுடன் சோம்பேறி சீவனத்தைப் பெருக்கிக்கொண்டார்கள். ஆரியர்களாம் மிலேச்சர்களெடுத்துக்கொண்ட பிராமண வேஷங்களைப்போல் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதிகளென வகுக்கப்பட்டிருந்த இத்தேசத்திய சோம்பேறிகளிற் சிலரும் பிராமண வேஷ மெடுத்துக் கொண்டபடியால் பெளத்த போதகர்களின் போதனையால் கேட்டிருந்த பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடையாம் சிறப்பு மொழிகளை மெய்யாகவே வோர் பிரம்மா முகத்திற்