பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 க. அயோத்திதாளலப் பண்டிதர் தைலின் அவர்களை யோராச்சரிய வுருவகமாகக் கொள்ளாமல் அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டு மென்னும் அவாவுடையவனகி புருசீகர்களின் அருகிற்சென்று யதார்த்த வந்தணர்களைக் கண்டவுடன் கைகூப்பி சரணுகதி கேட்பதுபோல் வணங்கினன். அரசன் கைகூப்பி சரணுகதி கேட்பதின் ரகசியார்த்தமறியா வேஷப்பிராமணர்கள் தங்கள் கூட்டத்தோர்களுட னெழுந்து ஒருகரந் து.ாக்கி யாசீர்வதித்தார்கள். புலன் தென்பட்டோராகும் தென்புலத்தார் போல பெண் சாதி பிள்ளைகளுடன் யாவரும் ஒரு கரந்துக்கியதைக் கண்டவரசன் சற்று நிதானித்துத் தாங்கள் யார், யாதுகாரணமாக இவ்விடம் வந்தீர்களென்று வினவ நாங்கள் பிராமணர்கள் தங்களுடையப் பெயருங் கீர்த்தியு மித்தேசத்தி லென்றும் விளங்கும்படி செய்வித்ததற்கு வந்தோமென்று கூறினர்கள். அவற்றைக்கேட்ட வரசன் அவர்களை நோக்கி வந்துள்ள நீங்களெல்லோரும் பிராமணர்களா அன்றேல் தனிமெயாக பல்லக்கில் உட்கார்ந்திருக்கின்ருரே அவர்மட்டிலும் பிராமன ராவென்று வினவினன். அவற்றிற்கு மாறுத்திரமாகப் புருசீகர் கள் நாங்களெல்லவரும் பிராமணர்களே யென்று கூறினர்கள். நீங்கள் பெண் சாதி பிள்ளைகளுடன் சகல சுகபோகங் களையும் அநுபவித்துக்கொண்டு எல்லவரும் பிராமணர்க ளென்ருல் உங்கள் வார்த்தைகளை யெவ்வகையால் நம்புகிறது. இதனந்தரார்த்தங்களை யேதேனும் சாஸ்திரங்கள் விளக்குகின் றதா வென்று கேட்க பூர்வத்தில் எங்களைப்பற்றி ஒர் பெரியவர் சில ரிஷிகளுக்கு மனுதன்ம சாஸ்திரமென்னு மோர் இஸ்மிருதி சொல்லி வைத்திருக்கின்ருர். அதில் உலக வுற்பத்தியைப்பற்றி பிரமத்தினிடமிருந்து தங்க வடிவமான வோர் முட்டையுதித்து இரண்டு பாகமாகி மேற்பிரிவு வானமாகவும், கீழ்ப்பிரிவு பூமியாகவும் தோன்றி அதை யாளுதற்கு பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணனும், புஜத்திலிருந்து கூடித்திரியனும் துடையிலிருந்து வைசியனும் பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்தார்களென்று குறிப்பிட்டிருக்கின்றவைகளில் முகத்திற் பிறந்த பிராமணர்களாகிய நாங்களே சிறந்தவர்களென்று கூறியதை அரசன் கேட்டு இதனந்தரார்த்தத்தைத் தெரிந்துக்